அருவங்காடு அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை, காரில் வந்த கும்பல் தாக்கியதையடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பேருந்து ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து பழநி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தினை பாபு என்பவர் இயக்கிவந்தார். பேருந்து அருவங்காடு அருகே வந்தபோது, அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சிலர் திடீரென பேருந்தின் குறுக்கே காரை நிறுத்திவிட்டு, தன் தலைவர் வருகையில் ஏன் வழி விடவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், வாக்குவாதம் முற்றி, அரசுப் […]
