அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் இருந்து பெரும்பாறை, கே.சி.பட்டி வழியாக பன்றிமலைக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு வத்தலக்குண்டில் இருந்து தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் பெரும்பாறை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து பழுதாகி நின்றதால் […]
