மதுரையிலிருந்து சென்னைக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லாததால் பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொங்கல் விடுமுறையை கொண்டாடுவதற்காக மதுரைக்கு வந்து சென்னை திரும்புவோருக்கு முறையான பேருந்து வசதி செய்யாததால் மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்களிடையே கேட்ட போது “விடுமுறையை முடித்த பின்னர் ஊருக்குத் திரும்பும் பயணிகளுக்கு ஏற்றார்போல் பேருந்து வசதி இயக்கப்படவில்லை எனவும் பயணிகளை முறையாக வரிசைப்படுத்தி அனுப்பவில்லை எனவும் பொதுவாக விடுமுறையை கழித்த பின்னர் […]
