குடிநீர் ஒழுங்காக விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கோபத்தில் அரசு பேருந்தை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலகிராமத்தில் உள்ள காலனிக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் இணைந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இதுகுறித்து […]
