சேலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து சாலையில் தீப்பற்றி எரிந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சேலம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் இன்ஜின் பகுதியில் புகை வந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் கார்த்தி உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து பேருந்தில் உள்ள அனைத்து பயணிகளும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பேருந்தினுள் அமர்ந்திருந்த 50 பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து ஜன்னல் வழியாக […]
