பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுனரை 2 பேர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பரக்குடிவிளை தோட்டவாரம் பகுதியில் போக்குவரத்து கழக மார்த்தாண்டம் பணிமனை ஓட்டுனரான பரமேஸ்வரன் வசித்து வருகிறார். இவர் மார்த்தாண்டத்திலிருந்து மேல்மிடாலம் செல்லும் பேருந்தை இயக்கி கொண்டு வந்துள்ளார். அப்போது ஒரு பெண் பைங்குளம் செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். ஆனால் பேருந்தில் ஏறிய பிறகுதான் அது அந்த ஊருக்கு செல்லாது என்பது தெரியவந்துள்ளது. உடனே அந்த பெண் பேருந்தை நிறுத்துமாறு கூறியும் பரமேஸ்வரன் […]
