பேருந்துகள் பழுதாகி நடுவழியில் நின்று விடுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சாலையில் மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து திடீரென பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டது. இதனால் ஓட்டுநர் பேருந்தை இயக்குவதற்கு முயற்சி செய்தும் அவரால் இயலவில்லை. இதனை அடுத்து பயணிகள் கீழே இறங்கி தள்ளிய பிறகு பேருந்து ஸ்டார்ட் ஆனது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, டவுன் பேருந்துகளில் பெண்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த பேருந்துகள் […]
