எடப்பாடி அருகே நடைபெற்ற எருதாட்டப் போட்டியில் காளை முட்டி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வேம்பனேரி ஐய்யனாரப்பன் கோயிலில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டப் போட்டி நடைபெற்றது. இதில் எடப்பாடி, கொங்கணாபுரம், நங்கவள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. எருதாட்டத்தைக் காண சென்ற கோவிந்தராஜ் மகன் உத்தரகுமார் (22) காளை முட்டி படுகாயமடைந்தார். இந்நிலையில், உடனடியாக அவர் எடப்பாடி அரசு […]
