கோவை விமான நிலையத்தில் தனியார் நிறுவன காவலாளி துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஜோகிந்தர் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருந்த ஜோகிந்தர் தமிழக சட்டமன்ற தேர்தலை யொட்டி அதனை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து டெல்லியில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜோகிந்தர் கோவை விமான […]
