இரண்டு காளைகள் சண்டை போட்டபோது தவறி கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் இவரது ஜல்லிக்கட்டு காளையுடன் அதே பகுதியில் இருக்கும் மற்றொரு காளை சண்டை போட்டுள்ளது. இந்நிலையில் இரண்டுகாளைகளும் ஒன்றை ஒன்று முட்டி மோதிக் கொண்ட போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த 30 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இதனை பார்த்ததும் […]
