தருமபுரியில் கட்டிட வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் இருவர் பலியாகினர். தருமபுரி மாவட்டம் அருகே கட்டிட தொழிலாளர்களை வேலைக்கு ஏற்றி சென்ற சரக்கு லாரி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். குளியனூரிலிருந்து- ஏரியூருக்கு கட்டிட தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. இதில் சிமெண்ட் மற்றும் கற்களை கலக்கும் கலவை எந்திரமும் ஏற்றப்பட்டிருந்தது. குமாரசாமிப்பேட்டையின் மேம்பாலம் அருகே மின்னல் வேகத்தில் சரக்கு லாரி சென்ற போது கலவை எந்திரத்தின் அதிக எடை காரணமாக ஓட்டுனரின் […]
