தேயிலைத் தோட்டப் பகுதியில் உடல் நலம் பாதித்த காட்டெருமைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்டங்களில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் வனத்துறையினர் புதுக்காடு 23-ஆம் நம்பர் தேயிலைத் தோட்டப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நடக்க முடியாமல் காட்டெருமை ஒன்று படுத்துக் கிடப்பதை பார்த்துள்ளனர். இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி அதிகாரிகள் மற்றும் வால்பாறை அரசு […]
