இறந்து கிடந்த காட்டெருமையின் உடலை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து புதைத்துவிட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பாளையம் மலையடிவாரப் பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெண் காட்டெருமை ஒன்று இறந்து கிடப்பதை வனத்துறையினர் பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் செல்வராஜ் மற்றும் முதுமலை வன கால்நடை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் குமார் ஆகியோர் காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை […]
