BSNL நிறுவனம் 54 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியத் தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் பின்னடைவை சந்திக்க தொடங்கியது. இதைதொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான BSNL லும் சரிவையே சந்திக்க ஆரம்பித்தது. கடந்த 2017-18 ஆண்டு இறுதிவரைBSNL நிறுவனம் ரூ.31,287 கோடி இழப்பை சந்தித்துள்ளது. அத்துடன் பிப்ரவரி மாதத்தின் சம்பளம் சரியான நேரத்தில் கொடுக்கபடவில்லை.மார்ச் மாதத்தில் பாதியில்தான் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை BSNL தன் வரலாற்றில் முதல் முறையாக சந்தித்துள்ளது. இந்நிலையில், […]
