திருவாடானை அருகே தம்பியை கத்தியால் குத்திக்கொன்று விட்டு, தப்பியோடியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கோனேரிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு பார்த்திபன் (தம்பி) மற்றும் வேலு (அண்ணன்) என 2 மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், வேலுவின் மனைவி கடந்த ஆண்டு இறந்து விட்டார். பார்த்திபன் வெளியூரில் வேலைசெய்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கை அடுத்து தற்போது வீட்டில் வசித்துவந்தார். அப்போது, சகோதரர்கள் இருவருக்குமிடையே […]
