உங்களின் அன்றாட செயல்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் மையமாக இருப்பது மூளைதான். மூளையை ஆரோக்கியமாகவும், செயல்திறன் மிக்கதாகவும் பராமரித்தால், உடல்நலம், மனநலம் இரண்டையும் காக்கலாம். இதற்கு தடையாக இருக்கும் மோசமான 7 பழக்கங்களை பட்டியலிடுகிறோம் இவற்றை தவிர்த்து மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள். காலை உணவை தவிர்த்தல் : காலை உணவை தவிர்க்காதீர்கள். காலை உணவை தவிர்ப்பது ரத்த சர்க்கரை அளவை குறைத்து மூளையை சோர்வடையச் செய்யும். சரியான நேரத்தில் தவறாமல் உணவு அருந்துவது மூளையை ஆற்றலுடன் வைக்கும். […]
