ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பல கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பிராமணர்கள் பூணூல் மாற்றும் விழா நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் பல கோவில்களில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இவ்வழிபாட்டில் பிராமணர்கள் பலர் கலந்துகொண்டு பூணூல் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் பிராமணர்கள் சங்கம் சார்பாக பூணூல் மாற்றும் விழா மதுராபாய் திருமண மண்டபம் மற்றும் அருணாச்சல ஐயர் சத்திரத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவரான வக்கீல் சாய்ராம் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். […]
