ஆற்றில் மூழ்கி 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செம்படம் புதூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் லோகநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செம்படம் புதூரில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக லோகநாதன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். இதனை அடுத்து குளித்துக் கொண்டிருக்கும் போது லோகநாதன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி […]
