ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி ஜாகிர் உசேன் தெருவில் முகமது உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபுபக்கர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அபுபக்கர் தனது நண்பர்களுடன் நெம்மக்கோட்டை உடையார் தெருவில் இருக்கும் புதுகுளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் அபுபக்கர் […]
