காரில் சென்றவர் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் அன்பு ரஜினி. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று இரவு இவர் காரில் முத்தியால்பேட்டை சாலை தெருவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது காரை வழிமறித்து திடீரென காரின் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். பின்னர் அன்பு ரஜினியை காரிலிருந்து வெளியே இழுத்துப்போட்டு சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். […]
