தெலுங்கானா மாநிலத்தில் போச்சபள்ளி கிராமத்தில் 3 வயது சிறுவன் ஒருவன் 120 அடி ஆழமுள்ள பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூன்று வயதாகும் சாய்வர்தன் என்ற சிறுவன் விவசாய நிலத்தில் நடந்து சென்றபோது மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டான். நேற்று தண்ணீருக்காக மூன்று கிணறுகள் தோண்டப்பட்ட நிலையில் மூன்றிலும் தண்ணீர் வராததால் திறந்த நிலையில் வைத்துள்ளனர். அதில் ஒரு ஆழ்துளை கிணற்றில் சிறுவன் விழுந்துள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்த […]
