பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள வாணியாறு அணையில் புது மாப்பிள்ளை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அமைந்துள்ள வாணியாறு அணையில் சடலம் ஒன்று மிதப்பதாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.. தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அணையிலுள்ள சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் பாப்பிரெட்டி மாரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் சக்தி (வயது 30) என்பதும், அதுமட்டுமில்லாமல் சக்திக்கு பண்டாரசெட்டிப்பட்டி பகுதியைச் […]
