கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலின் நடுவே இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு தினமும் சராசரியாக பத்தாயிரம் பேர் வரை மட்டுமே படகு சவாரிக்கும் அழைத்து செல்லப்படுவதால் மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். தமிழக அரசு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய இரண்டு சொகுசு படகுகளை கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு வாங்கியது. தற்போது படகு தளத்தில் போதிய கட்டமைப்பு இல்லாததாலும், கொரோனா தொற்று பாதிப்பாலும் […]
