ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாட்டின் மத்திய கிழக்குப் பகுதியில் டாங்கன்யிகா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் டாங்கன்யிகா என்ற ஏரி உள்ளது. இங்கு படகு சவாரி மிகவும் பிரபலமானதாகும். இந்த நிலையில் 80 க்கும் அதிகமான பயணிகளுடன் ஒரு படகு டாங்கன்யிகா ஏரியின் நடுபகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கவிழ்ந்துள்ளது. இதனால் படகில் பயணித்த அனைவரும் நீரில் முழ்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். […]
