கண் பார்வையற்றவரையும், அவரது தாயாரையும் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கஞ்சூர் பகுதியில் 48 வயதான கண் பார்வையற்றவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா சிகிச்சை மையத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து கொரோனா தொற்றிலிருந்து குணமான கண்பார்வையற்றவரை அவரது தாயாருடன் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அந்த வாகனத்தின் […]
