மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையின்றி யாரும் வெளியே வரகூடாது […]
