பனமரத்துப்பட்டி அருகே சாலையில் கிடந்த எஃப்.எம் வெடித்து சிதறியதில் விவசாயி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க விவசாயி மணி என்பவர் தன்னுடைய வீட்டின் அருகே நேற்று முன்தினம் (ஜூன் 16) கிடந்த எஃப்.எம் ரேடியோ ஒன்றை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று (ஜூன் 17) நண்பகல் பாட்டு கேட்பதற்காக எஃப்.எம் ரேடியோவை ஆன் செய்துள்ளார் மணி.. அப்போது, […]
