கருப்பு பணக் கடத்தலை தடுக்கும் விதத்தில் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களின் விவரங்களை இரண்டாம் கட்டமாக கைப்பற்றியுள்ளது இந்தியா. கருப்பு பணத்தை கைப்பற்றுவதற்காக மத்திய அரசின் சார்பில் சில ஆண்டுகளாக பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது, 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது ஆகியவை இதில் முக்கியமானவை ஆகும். இந்நிலையில் கருப்பு பணம் பதுக்குவதை தடுக்கும் விதமாக, சுவிட்சர்லாந்து வங்கிகளில் விதிமுறை மீறி பணம் வைத்துள்ளவர்களின் விவரங்களை வெளியிட இந்தியா மற்றும் […]
