குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் பாஜக ஒரு அடிகூட பின்வாங்காது என அக்கட்சியின் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி மக்களிடையே பேசினார். அதில், குடியுரிமை திருத்த சட்டம் என்பது யாருடைய குடியுரிமையும் பறிக்கும் சட்டம் கிடையாது என்றும், பிறருக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்யும் சட்டம் எனவும் கூறினார். அதேபோன்று குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் […]
