Categories
தேசிய செய்திகள்

லேட்டா வந்தா என்ன ? ”லேட்டஸ்ட்டா பணம் கொடுப்போம்”- பியூஷ் கோயல்…!!

தேஜஸ் ரயில்கள் தாமதமானால் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்திடம் பயணிகள் இழப்பீடு பெறுவதுபோல், ரயில்களில் சரக்குகள் தாமதமானால் வாடிக்கையாளர்கள் விரைவில் இழப்பீடு பெறலாம் என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் நிறுவன தினம் டெல்லியில் நடந்தது. இதில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டார். இந்த விழாவில் அவர் பேசும்போது, “டெல்லி-லக்னோ, மும்மை-ஆமதாபாத் இடையே தேஜஸ் ரயில்கள் வெற்றிகரமாக இயங்கிவருகின்றன. இந்த ரயில்களைப் போலவே, சரக்குகள் சரியான நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

”எல்லாரும் சொல்லுங்க” புதிய பரப்புரையை தொடங்கவுள்ள நிதியமைச்சகம்….!!

பட்ஜெட் தொடர்பான கடினமாக பொருளாதார கருத்துகள் பொதுமக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் #ArthShastri என்ற பரப்புரையை நிதி அமைச்சகம் தொடங்கவுள்ளது. கடினமான பொருளாதார கருத்துகளை பொதுமக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் #ArthShastri என்ற பரப்புரையை நிதி அமைச்சகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் பரப்புரைத் திட்டத்தின் கீழ், கடினமான கருத்துகளும் எளிமையாக மக்களுக்குப் புரியும்படி அனிமேஷன் காணொலிகளை நிதி அமைச்சகம் வெளியிடும். கடந்த ஆண்டும் இதேபோன்ற திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது […]

Categories
Uncategorized

ஹர்திக் பட்டேல் மீது பாஜக மீண்டும் தாக்குதல்

ஹர்திக் பட்டேல் மீது பாஜக மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பதாகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். குஜராத்தின் இளம் அரசியல்வாதியான ஹர்திக் பட்டேல் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பாஜக அரசு மீது குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் இந்தியில் பதிவிட்டிருந்தார். அந்த இந்தி பதிப்பின் தமிழாக்கம்: ஹர்திக் பட்டேல் மீது பாஜக மீண்டும் தாக்குதலை தொடர்ந்துள்ளது. ஹர்த்திக் தனது சமூக மக்களுக்கு குரல் கொடுக்கிறார். வேலையில்லாத மக்களுக்கு வேலை கேட்கிறார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

CAA , NRC , NPRக்கு எதிராக வீடு வீடாக பரப்புரை செய்வோம் – சீதாராம் யெச்சூரி

 குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (NPR) ஆகியவற்றிற்கு இருக்கும் தொடர்புகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீடு வீடாக விரைவில் பரப்புரை மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார். கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய பட்ஜெட் : அல்வா கொடுக்கத் தயாராகும் நிதியமைச்சர்…!!

வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்செய்யப்படவுள்ள நிலையில் அல்வா கிண்டும் நிகழ்ச்சி நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல்செய்யப்படவுள்ளது. இதனால் அல்வா கிண்டும் நிகழ்ச்சி, நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் வடக்கு பகுதியில் நடைபெறும் இந்த அல்வா கிண்டும் விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதியமைச்சகத்தின் மற்ற உயர் அலுவலர்கள், எழுத்தர்கள் கலந்துகொள்ளவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும், மத்திய நிதிநிலை அறிக்கை […]

Categories
செய்திகள் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“தேசிய பாதுகாப்பு சட்டம்” டெல்லியில் பாய்கிறது.

டெல்லியில் NSE  எனப்படும் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மூன்று மாதங்களுக்கு காவல்துறை பயன்படுத்திக்கொள்ள ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார். தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் டெல்லியில் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் என பல்வேறு இடங்களில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சமாளிக்க நாளை முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை 3 மாதங்கள் டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

‘இந்தியா இந்துக்களின் நாடு’ – ஆர்எஸ்எஸ் தலைவர் சர்ச்சைப் பேச்சு

இந்தியா என்பது இந்துக்களின் நாடு என்றும்; இந்நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள் தான் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் நடைபெற்ற விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். அங்கு பேசிய அவர், “ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இந்த நாடு இந்துக்களுக்கு சொந்தம் என்கின்றனர். அதாவது இந்நாட்டிலுள்ள 130 கோடி மக்களுக்கும் இந்துக்கள்தான் என்பதே இதற்குப் பொருள். அனைவரையும் இந்து என்று கூறுவதன் மூலம் யாருடைய மதத்தையோ […]

Categories
தேசிய செய்திகள்

‘வந்தே மாதரத்தை ஏற்காதவர்களுக்கு நாட்டில் வாழ உரிமையில்லை’

வந்தே மாதரத்தை ஏற்காதவர்களுக்கு நாட்டில் வாழ உரிமையில்லை என மத்திய இணையமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை மக்களுக்கு விளக்கும் வகையில் ஜன் ஜக்ரன் சபா தொடங்கப்பட்டது. பொதுமக்கள் திரளாகப் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்று சட்டங்கள் குறித்து விளக்குவர். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், “நாட்டுக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் தேசத்தின் மீது பற்றுவைக்காதவர்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிஜேபி_யை நோக்கி ”தடம் புரளும் காங். தலைவர்கள்” தேசிய அரசியலில் தீடீர் திருப்பம் …!!

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று எந்த மாநில அரசும் தெரிவிக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்ற கேரளா , மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்நிலையில் கேரளா கோழிக்கோட்டில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்று பேசிய மூத்த வழக்கறிஞரும் , காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான கபில் சிபில் குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது என்றும் , […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நரேந்திர மோடி, அமித் ஷா மீது சுப்ரியா சுலே கடும் தாக்கு …!!

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சுப்ரியா சுலே விமர்சித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் மூத்தத் தலைவர் சுப்ரியா சுலே, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக மகாராஷ்டிராவில் பெண்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் மூவர்ணக் கொடி, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பதாகைகளை வைத்திருந்தனர். கூட்டத்தில் பெண்கள் இன்குலாப் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அனுமதி தர முடியாது…. ”பாஜக தலைவருக்கு தடை” ….. மம்தா அரசு அதிரடி …!!

மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பேரணி மேற்கொள்ள இருந்த நிலையில் மாநில பாஜக தலைவர் திலீப் கோஸ் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் பகுதியில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பேரணிக்கு மாநில பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்தப் பேரணியில் கலந்துகொள்ள மாநில தலைவர் திலீப் கோஸ் வந்திருந்தார். அப்போது காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து அவர் கூறும்போது, “நந்திகிராமில் அமைதிப் பேரணி நடத்த கடந்த 15 தினங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

நரேந்திர மோடி, அமித் ஷாவுக்கு நன்றி கூறிய பாகிஸ்தான் அகதிகள்

ஹரியானா, டெல்லியில் வசிக்கும் பாகிஸ்தான் அகதிகள் டெல்லி பாஜக தலைமையகத்திற்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். டெல்லியிலுள்ள பாஜக தலைமையகத்துக்கு பாகிஸ்தான் அகதிகள் நேற்று சென்றனர். அங்கு அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த அகதிகள் டெல்லி, ஹரியானா ஆகிய பகுதிகளில் வசிக்கிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் 2014ஆம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக முன்னாள் எம்பி மறைவு …!!

பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் (எம்பி), மூத்தப் பத்திரிகையாளருமான அஸ்வினி குமார் சோப்ரா குர்கானில் நேற்று காலமானார். பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்தப் பத்திரிகையாளருமான அஸ்வினி குமார் சோப்ரா (63) குர்கானில் நேற்று காலமானார். அஸ்வினி குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததன் காரணமாக அவர் குர்கானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 16ஆவது மக்களவை தேர்தலின்போது ஹரியானாவின் கர்னால் தொகுதியிலிருந்து சோப்ரா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சோப்ராவின் மறைவிற்கு ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் […]

Categories
தேசிய செய்திகள்

உன் மனைவி, குழந்தையை பாலியல் தொழிலாளி ஆக்குவோம்…. போராடுவார்கள் மீது போலீஸ் காட்டம் …!!

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவரின் மனைவியைபாலியல் தொழிலாளியாக்குவோம் என்று காவல்துறை மிரட்டிய சம்பவம், பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கடந்த டிசம் பர் 20-ஆம் தேதி லக்னோவில் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ராபின் வர்மாவும் ஒருவராவார். உத்தரப்பிரதேச பாஜக காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்துள்ள ராபின் குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், குடியுரிமைச் சட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

‘சி.ஏ.ஏ. நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராக பின்னப்பட்ட சதி’ – சந்திரசேகர ஆசாத்

நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராக பின்னப்பட்ட சதிதான் குடியுரிமை திருத்தச் சட்டம் என பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் குற்றஞ்சாட்டியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் தலைமையில் டெல்லி தாராகஞ்ச் பகுதியில் நடத்தப்பட்டது. போராட்டத்தில் வன்முறை வெடித்ததாகக் கூறி காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். இதையடுத்து, அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பலமுறை சிறை சென்றாலும் அரசியலமைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்தச் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்… மருத்துவ சங்கம் போர்க்கொடி!

மருந்துத் தயாரிப்பு நிறு வனங்கள், மருத்துவர்களுக்கு லஞ்சமாக பெண்களை அனுப்பி வைக்கிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியதாக சர்ச்சை எழுந் துள்ளது. இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது தலைநகர் தில்லியில் கடந்த ஜனவரி 2-இல் ஜைடஸ் காடிலா, டொரண்ட் பார்மாஸிட்டிகல்ஸ், வாக்ஹார்ட் உள்ளிட்ட மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதி களைச் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுடன் சந்தைப்படுத்துதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மருந்துத் தயா ரிப்பு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதலமைச்சர் வேட்பாளர் யார்? – பாஜகவை கலாய்த்த ஆம் ஆத்மி!

பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என அறிவிக்காததை நக்கல் செய்யும் வகையில் ஆம் ஆத்மி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவிவருகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதேபோல பாஜகவும் தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அறிவித்தது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

 நடைபெறவுள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 2015ஆம் ஆண்டு பெற்ற மாபெரும் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள ஆம் ஆத்மி முனைப்பு காட்டிவருகிறது. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஆட்சியை பிடிக்க போராடிவருகின்றன. ஆம் ஆத்மி சார்பில் ஏற்கனவே மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தவறாக வழிநடத்துறீங்க…. பாஜக மீது பாயும் கெஜ்ரிவால் …!!

நிர்பயாவின் தாயாரை பாஜக தவறாக வழிநடத்துகிறது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நிர்பயா பாலியல் வழக்கு விவகாரத்தில் டெல்லி அரசு தனது பொறுப்புகளை சரியாகச் செய்துவருகிறது. நாங்கள் கருணை மனுவை சில மணி நேரங்களுக்குள் அனுப்பினோம். எனவே குற்றவாளிகளை தூக்கிலிட தாமதப்படுத்துவதில் டெல்லி அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை” என்றார். டெல்லி அரசு குற்றவாளிகளை தூக்கிலிட தாமதப்படுத்துகிறது என்று மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

வேணாம்… வலிக்குது…. ”அரசியல் செய்யாதீங்க”…. கெஜ்ரிவால் அறிவுரை

நிர்பயா வழக்கு விவகாரம் தொடர்பாக அரசியலில் செய்யாமல், இதுபோன்ற வழக்குகளில் விரைவாக நீதி கிடைக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவினரிடம் வலியுறுத்தியுள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், “நான்கு குற்றவாளிகளை தூக்கிலிட தாமதமானதுக்கு ஆம் ஆத்மி அரசு காரணம் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற பிரச்னையில் அரசியல் செய்வது வருத்தமாக இருக்கிறது. குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்படுவதை உறுதிசெய்ய, ஒன்றிணைந்து செயல்பட […]

Categories
Uncategorized

ஆமதாபாத்-மும்பை தேஜஸ் அதிவிரைவு ரயில் தொடக்கம்

தேஜஸ் எக்ஸ்பிரஸ்ஸின் முதல் பயணத்தை ஆமதாபாத்தில் இன்று குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். ஆமதாபாத்- மும்பை இடையே ஐஆா்சிடிசி சாா்பில் தேஜஸ் விரைவு ரயில் இன்று தனது முதல் பயணத்தை தொடங்கியது. தனியாா் சாா்பில் இயக்கப்படும் இரண்டாவது ரயில் இதுவாகும். நாட்டின் முதல் தனியாா் ரயில் தில்லி-லக்னோ இடையிலான தேஜஸ் ரயில் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது தனியார் ரயில் ஆமதாபாத்- மும்பை வழித்தடம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசியல் இலாபத்திற்க்காக பயன்படுத்தியதில்லை – சிவசேனா

சத்ரபதி சிவாஜி பெயரையும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரையும் ஒருபோதும் அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்தியதில்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா, மும்பையின் நிழல் உலக தாதா கரம் லாலாவைப் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டது. சாம்னா செய்தித்தாளின் ஆசிரியர் சஞ்சய் ராவுத்தின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விளக்கம் தெரிவிக்கும் வகையில் இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திர காந்தி மும்பை வரும்போதெல்லாம் கரம் லாலாவை சந்திப்பார் என்று சஞ்சய் […]

Categories
தேசிய செய்திகள்

‘மோடி உங்க குடியுரிமையை காட்டுங்க’ – ஆர்.டி.ஐ.யில் பகீர் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமை குறித்த விவரங்களைத் தனக்கு வெளியிட வேண்டும் எனத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் விண்ணப்பித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக இந்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, மேற்குவங்க மாநிலத்தில் தீவிர போராட்டம் நிலவிவருகிறது. இந்நிலையில், இந்தச் சட்டத்தை முன்வைத்து கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் மோடியிடம் விசித்திர கேள்வியை முன்வைத்துள்ளார். கேரளாவின் சாலக்குடி பகுதியைச் சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

NPR கேரளாவில் கூடாது… மத்திய அரசை சீண்டும் கேரள முதல்வர்.!!

தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்தை (NPR) கேரளாவில் மேற்கொள்ளக் கூடாது என அம்மாநிலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு கேரள அரசு சார்பில் திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்தை (NPR) கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள கேரள அரசு, அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, கேரள அரசு தலைமைச் செயலர் கே.ஆர். ஜோதிலால் மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், “2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பணவீக்கம் குறித்து மோடி பதிலளிக்க வேண்டும்- ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

பணவீக்கம் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அடுத்த 30 நாள்களுக்குள் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து விவரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்கிறது என்றும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்றும் பலர் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, இந்தியாவில் பணவீக்கம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா கூட்டணியில் குழப்பம்?

இந்திரா காந்தி குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த சிவசேனா மூத்தத் தலைவர், தனது கருத்தை திரும்பப்பெற்ற நிலையிலும், மகாராஷ்டிரா கூட்டணியில் தொடர்ந்து குழப்பம் நீடித்துவருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “நிழல் உலக தாதாவான ஹாஜி மஸ்தான் மந்திராலயாவுக்கு சென்றால் முழு அமைச்சகமே அவரை சந்திக்கச் செல்லும். கரிம் லாலாவை இந்திரா காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு – குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்த டெல்லி அரசு!

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் கருணை மனுவை டெல்லி அரசு நிராகரித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் கருணை மனுவை இன்று நிராகரித்துள்ளது. இந்த மனு தற்போது டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கும், அதன்பின்னர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் அனுப்பி வைக்கப்படும். 23 வயதான நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலத்த காயம் […]

Categories
மாநில செய்திகள்

பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் எம்.பி.க்கு வந்த மர்ம விஷம் தடவிய கடிதம்…! போலீஸில் புகார் 

பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் எம்.பி.க்கு வி‌ஷ ரசாயனம் தடவப்பட்டு வந்த கடிதத்தில் தனக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது.என அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மத்தியபிரதேசத்தை சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர். இவர் தற்போது எம்.பி.யாக இருக்கிறார். அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவது அவரது வழக்கம். இந்நிலையில்  அவருக்கு கடந்த மாதம் அக்டோபரில் ஒரு கடிதம் வந்ததாகவும், அந்த கடிதத்தை இப்போது தான் பிரித்தது படித்ததாகவும் பிரக்யா எம்.பி. கூறி இருக்கிறார்.  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அமைதியான மக்களிடம் கதையளக்க வேண்டாம்…. 5 விமர்சகர்களின் கேள்விக்கு பதிலளிக்கத் தயாரா?

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று விமர்சகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாரா? என்று, மத்திய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது: “குடியுரிமையை வழங்குவதற்காகவே குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்கிறார் பிரதமர். ஆனால், அச்சட்டம், தங்களை குடிமக்கள் இல்லை என அறிவித்து விடும் எனவும், தங்கள் குடியுரிமையை […]

Categories
தேசிய செய்திகள்

மோடிக்கு எதிராகப் பேசினால் உயிரோடு எரிக்கப்படுவீர்கள்…. உ.பி. பாஜக அமைச்சர் வெறிப்பேச்சு!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராகப் பேசுபவர்களை உயிரோடுஎரிக்க வேண்டும்” என உத்தரப்பிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் அலிகார் நகரத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்துணைத் முதல்வர் கேசவ் பிரசாத்மவுரியா, தொழிலாளர் துறை அமைச்சர் ரகுராஜ் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.அப்போதுதான், “சிஏஏ-வைஎதிர்ப்பவர்கள் வெறும் 1 சதவிகிதம் பேர்தான். இந்தியாவில் தங்கியிருந்து, எங்கள் வரிகளைச் சாப்பிட்டு எங்கள் தலைவர்களுக்கு எதிராக ‘முர்தாபாத்’ […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி வளர்ச்சியில் என் பங்கு இருக்கும்….. தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு பேச்சு…!!

தூத்துக்குடி மாவட்டம் விரைவில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் அதில் எனது பங்கும் கட்டாயம்  இருக்கும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துறைமுக சங்கத்தில் நேற்றையதினம் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த உலகில் பல்வேறு தொழிலதிபர்களும் அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநரும் தமிழகத்தின் முன்னாள் பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறந்த ஏற்றுமதியாளர்களாக தேர்நதெடுக்கப்பட்ட 38 பேருக்கு விருது வழங்கிய, பின் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் திட்டங்களை மம்தா பானர்ஜி அனுமதிப்பதில்லை – மோடி தாக்கு..!!

மத்திய அரசின் நலத்திட்டங்கள் இடைத்தரகர்களை ஒழிப்பதால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அத்திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். கொல்கத்தா துறைமுக அறைக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். இந்நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி, “ஆயுஷ்மான் பாரத், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி போன்ற திட்டங்களை மேற்கு வங்க மாநில அரசு அனுமதிப்பதில்லை. அவ்வாறு அனுமதித்தால் […]

Categories
தேசிய செய்திகள்

ஹலோ அமித் ஷா பேசுற….சிக்கிய விமானப்படை அலுவலர்!

உள்துறை அமைச்சர் அமித் ஷா போல் ஆளுநரிடம் பேசிய விமானப்படை ஊழியர் கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விமானப்படை விங் கமாண்டரான குல்தீப் பகேலா, டெல்லியில் உள்ள விமானப்படை தலைமை அலுவலகத்தில் பணியாற்றிவருகிறார். அவரது நண்பரான சந்தரேஷ் குமார் சுக்லா பல் மருத்துவராகப் பணியாற்றுகிறார். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பதவி காலியாக உள்ள நிலையில் அப்பதவிக்காக சந்தரேஷ் குமார் விண்ணப்பித்துள்ளார். பதவியை எப்படியாவது அடைந்துவிட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டதில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு’- பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு..!!

கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டதில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பிருப்பதாக பாஜக மூத்தத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார். மத்திய முன்னாள் இணையமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கன்னியாகுமரி மாவட்டத்தில், கேரள தமிழ்நாடு எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியிலிருந்த காவலர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். இதில் ஈடுபட்ட குற்றவாளிகள், முஸ்லிம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு பல குற்றச் செயல்களில் தேடப்பட்டுவரும் நபர் என்பது […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

வாய்ப்பில்லை ராஜா…. மத்திய அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்த CSO ….!!

நடப்பாண்டில் ஜிடிபி 5 சதவிகிதத்தைத் தாண்டாது என்று மத்திய புள்ளியியல் அலுவலகமும் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019-20 நிதியாண்டிற்கான, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (Gross domestic product – GDP) குறித்து, தரமதிப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டு வந்தன. ‘பிட்ச்’ நிறுவனம் 4.6 சதவிகிதம், ‘மூடிஸ்’ 4.9 சதவிகிதம், ‘இந்திய ரிசர்வ்வங்கி’, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ மற்றும் ‘ஐஎச்எஸ் மார்க்கிட்’ ஆகியவை 5 சதவிகிதம், ‘ஆசிய வளர்ச்சி வங்கி’ மற்றும் ‘கிரிசில்’ […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”ரூ 2,00,000,00,00,000 நலத்திட்டம் கட்” மத்திய அரசின் அதிரடி முடிவு ….!!

நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மோடி அரசு கைகழுவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019-20 நிதியாண்டில் ரூ. 24 லட்சத்து 60 ஆயிரம் கோடியை மொத்தவரி வருவாயாக ஈட்டுவதற்கு, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. இதில் ஜிஎஸ்டி இழப்பீடு போன்றவை தவிர்த்து, மத்திய அரசுக்கு ரூ. 16 லட் சத்து 50 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, 2019-20 நிதியாண்டுக் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி, அமித்ஷாவால் நாடு ஆபத்தில் உள்ளது… சிவசேனா எச்சரிக்கை

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் நடவடிக்கைகளால் நாடு ஆபத்தில் உள்ளதாக, சிவசேனா-வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த தலையங்கத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் என்ன விரும்பினார்களோ, அதுநடந்து கொண்டு இருக்கிறது.நாடு ஆபத்தில் உள்ளது. பிரிவினைவாத அரசியல் நாட்டிற்கு ஆபத்தானது. மும்பையில் 2008-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், முகமூடி அணிந்துஇருந்தனர். அதேபோலத் தான் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தாக்குதலில் ஈடுபட்டவர்களும் மூகமுடி அணிந்து […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம்

பல்வேறு மாவட்டங்களில் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்களின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. நாடு முழுவதும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய அளவில் தொழிற்சங்க ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களது கண்டனங்களை பதிவுசெய்துவருகின்றனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் வேலைநிறுத்த ஊர்வலம் காஞ்சிபுரம் […]

Categories
தேசிய செய்திகள்

”எல்லாம் உங்க ஆதரவோடு நடந்த கொடூரம்” புது குண்டை தூக்கிப் போட்ட சித்தராமைய்யா …!!

டெல்லி ஜே.என்.யு.வில் நடைபெற்ற தாக்குதல் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற ஒன்று என சித்தராமைய்யா குற்றஞ்சாட்டினார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது முகமூடி அணிந்திருந்த நபர்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் குறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா கூறுகையில், “அண்மையில் ஜே.என்.யு.வில் நடத்தப்பட்ட தாக்குதல் அரசாங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஒன்று. குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு எதிராகவே காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MPஆ இருந்தா என்ன ? தலைமை தாங்குவீங்களா ? கைது செய்து மாஸ் காட்டிய காவல்துறை ….!!

மத்திய அரசைக் கண்டித்து சி.ஐ.டி.யு, எ.ஐ.டி யு.சி உட்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய இரண்டு மக்களவை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்தும் வேலையில்லா திண்டாடத்தைக் கண்டித்தும் சி.ஐ.டி.யு, எ.ஐ.டியு.சி உட்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன், திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் நடைபெற்ற […]

Categories
மாநில செய்திகள்

என்ன விட்டுருங்க…. நான் அப்படி பேசல ….. நெல்லை கண்ணன் மனு …!!

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசியதாக, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நெல்லை கண்ணன் மனு தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசிய குற்றத்திற்காக கைது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிச்சயம் தாமரை மலரும்…. ”யாராலும் தடுக்க முடியாது”….. வானதி சீனிவாசன்

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தாமரை மலர்ந்துள்ளது என்றும், தமிழ்நாட்டில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் அதனை தொடர்ந்து எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில், இதனை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பாஜக கட்சியினர் ஆதரவுப் பேரணியை நடத்தி வருகின்றனர். தற்போது ஈரோடு, கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, சேலம் […]

Categories
தேசிய செய்திகள்

”அமெரிக்காவை வச்சு செய்யுங்க” இந்திய அரசே உடனே செய்யுங்க …..!!

ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதற்கு இந்தியா, அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயளாலர் டி ராஜா கூறுகையில், “அமெரிக்க ராணுவத்தால் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இந்தத் தாக்குதலால் கச்சா எண்ணெய் பெரும் உயர்வை சந்தித்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்கு பெரும்பாலும் ஈரானையே சார்ந்துள்ளது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் இந்தியாவை பெரிதும் பாதிப்படையச் செய்திருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியாவை விற்க இறுதி வரைவு தயார்

பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முடிவுக்கான இறுதி வரைவறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுக்கான வரைவறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இம்மாதத்திற்குள், விற்பனை ஒப்பந்தத்திற்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என அரசு சார்பில் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ், பாஜக மாணவர் அமைப்புகளுக்கிடையே மோதல்!

ஜே.என்.யூ. தாக்குதலைத் தொடர்ந்து, பாஜக மாணவர் அமைப்பு, காங்கிரஸ் மாணவர் அமைப்பு ஆகியவைக்கு இடையே குஜராத்தில் மோதல் வெடித்துள்ளது. ஜே.என்.யூ. தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் (ஏ.பி.வி.பி.) சேர்ந்தவர்களுக்கும் காங்கிரஸ் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது. முன்னதாக, காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் ஜே.என்.யூ. தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் ஏ.பி.வி.பி. எனக் குற்றஞ்சாட்டி […]

Categories
தேசிய செய்திகள்

அம்பானி, அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களுடன் மோடி திடீர் ஆலோசனை

நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து முகேஷ் அம்பானி, அதானி, ரத்தன் டாடா உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். வரும் பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார். ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, பாரதி ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் பாரதி மிட்டல், அதானிக் குழுமத் தலைவர் கவுதம் அதானி, […]

Categories
தேசிய செய்திகள்

சி.ஏ.ஏ-வில் இஸ்லாமியர்களை நீக்கியது தவறு – மத்திய அமைச்சரிடம் நேரடி எதிர்ப்பை தெரிவித்த கேரள எழுத்தாளர்.!!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களை மட்டும் தவிர்துள்ளதில் தனக்கு உடன்பாடில்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் கேரள எழுத்தாளர் ஜார்ஜ் ஓனக்கூர் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள், பொதுமக்கள், எதிர்கட்சிகள் என பல தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், சட்டத் திருத்தம் குறித்த விழிப்புணர்வு பரப்புரையை பாஜக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகள் மரணம்: வாயை திறக்காத பாஜக முதலமைச்சர்.!!

மருத்துவமனைகளில் ஏற்படும் குழந்தைகள் மரணம் தொடர்பான கேள்விக்கு குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி பதில் அளிக்காமல் சென்றார். குஜராத்தின் முக்கிய நகரான ராஜ்கோட்டிலுள்ள அரசு மருத்துவமனையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 111 பச்சிளம் குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். அதேபோல், குஜராத்தின் மற்றொரு முக்கிய நகராக அகமதாபாத் அரசு மருத்துவமனையிலும் குழந்தைகள் மரணமடைவது தொடர்கிறது. அரசு வெளியிட்ட தகவலின்படி, 2019ஆம் ஆண்டில் மட்டும் ராஜ்கோட்டில் 1,235 குழந்தைகளும் ஜாம்நகரில் 639 குழந்தைகளும் மரணமடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் யார்? – கமலாலயத்தில் தீவிர ஆலோசனை.!

தமிழ்நாடு பாஜகவின் தலைவரை தேர்வுசெய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையிலுள்ள தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இரண்டு மாதங்களைக் கடந்தும் உள்கட்சி பூசலால் தற்போதுவரை தமிழ்நாடு பாஜகவிற்கு மாநிலத் தலைவர் நியமனம் செய்யப்படவில்லை. தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சில இடங்களில் வெற்றிபெற்றுள்ளதைக் கருத்தில்கொண்டும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்துவதற்கும் மாநிலத் தலைவரை நியமிக்க […]

Categories
மாநில செய்திகள்

மரங்களில் சிலுவை…… பெயர்த்து எடுத்த பாஜக…. ஆந்திராவில் பரபரப்பு….!!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்கில்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களில் சிலுவை அடையாளம் இட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.  திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்கில்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களில் மர்ம நபர்கள் வெள்ளைநிற பெயிண்டால் சிலுவை சின்னம் வரைந்ததாக வந்த புகாரை அடுத்து சிலுவை சின்னங்கள் மரங்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டனர். திருப்பதியில் பக்தர்கள் மனங்களை புண்படுத்தும் விதமாக இதுபோன்ற செயல்களில் […]

Categories

Tech |