இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் ஐந்து நாட்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். வாணியம்பாடி தனியார் மைதானத்தில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மாபெரும் கண்டன பேரணி […]
