Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட்டில் ரயில் பயணிகள் வசதிக்கு ரூ.6,846 கோடி ஒதுக்கீடு

ரயிலில் பயணிகள் வசதிகளின் கட்டுமான அமைப்புக்கு, நாட்டின் வரவு-செலவு திட்ட அறிக்கையில் ஆறாயிரத்து 846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் வரவு-செலவு திட்ட அறிக்கையுடன் (பட்ஜெட்) ரயில்வே பட்ஜெட்டையும் கடந்த ஒன்றாம் தேதி சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், “ரயில் பயணிகளின் வசதிக்காக ஆறாயிரத்து 846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பெரும் தொகை ரயில் பயணிகள் வசதிகளுக்கான கட்டுமானப் பணிக்காகச் செலவிடப்படுகிறது. குறிப்பாக, மாற்றுத்திறனாளி பயணிகளுக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி தேர்தலலுக்காக ராமர் கோயில் அறக்கட்டளை – சிவசேனா

ராமர் கோயில் விவகாரம் அரசியலாகும் என்று தாங்கள் கருதவில்லை என்று கூறியுள்ள சிவசேனா, டெல்லி தேர்தலை கவனத்தில் கொண்டு ராமர் கோயில் அறக்கட்டளை அமைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையில் ராமர் கோயில் அறக்கட்டளை குழுவை அறிவித்தார். 15 பேர் கொண்ட அந்தக் குழு தன்னாட்சி அதிகாரத்தில் இயங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் நன்றி…!!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைக்கு பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நன்றி தெரிவித்து பதிலுரைத்தார். நாட்டின் வரவு-செலவு திட்ட அறிக்கை (பட்ஜெட்) கடந்த ஒன்றாம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல்செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, கடந்த மாதம் 31ஆம் தேதி இரு அவையினர் முன்னிலையிலும் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். குடியரசுத் தலைவர் தனது உரையில், “சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளில் ஒரே மாதிரியான வளர்ச்சி சாத்தியமாக உள்ளது. இனி […]

Categories
தேசிய செய்திகள்

“ராகுல் காந்தி டியூப்லைட்”… பிரதமர் மோடி கிண்டல்.!!

மக்களவையில் விவாதத்தின் போது குறுக்கிட்ட ராகுலை டியூப்லைட் என மறைமுகமாக விமர்சித்தார் பிரதமர் மோடி. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து இன்று உரையாற்றினார். அப்போது அவர்  நிதிப் பற்றாக்குறையை நாங்கள் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்க வேண்டும், நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும், இதற்காக நாங்கள் பல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என்றார்.   மேலும் பிரதமர் மோடி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

மைதில் மொழி பேசும் அகதிகளிடம் பாஜக வாக்கு சேகரிப்பு..!!

மைதில் மொழி பேசும் வாக்காளர்களிடம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வாக்கு சேகரித்தார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று, மைதில் மொழி பேசும் அகதிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஜே.பி. நட்டாவுடன் துணைத் தலைவர் பிரபாத் ஜாவும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய நட்டா, மைதில் மொழி பேசும் மக்கள் பாஜக கூட்டணிக்குப் பெருமளவு ஆதரவளித்து, டெல்லியில் பாஜக ஆட்சியமைக்க துணை நிற்க வேண்டும் என பரப்புரை செய்தார். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”ராமர் கோவில் கட்ட ரெடி” பிரதமர் மோடி அறிவிப்பு …!!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டம் தயார் என மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்காக இடம் ஒதுக்குதல், பணிகளை எப்படி செயல்படுத்த போறோம் போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி ஒரு டிராப்ட் தயாரிக்க வேண்டும். பின்னர் தான் அதை செயல்படுத்த வேண்டும் என்பதையொட்டி தான் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.அதன்படியே ராமஜென்ம பூமியில் கோவில் […]

Categories
மாநில செய்திகள்

CAAக்கு போராடாதீங்க…. பிரச்சனை வரும்…. வழக்கு போடுவாங்க…. வாழ்க்கை போயிடும்…. ரஜினி பேட்டி …!!

போராடும் மாணவர்களை சுயநலத்திற்க்காக அரசியல் கட்சிங்கள் பயன்படுத்துகின்றார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில் , NPR ரொம்ப அவசியம். கடந்த 2010ல் காங்கிரஸ் இதை கொண்டு வந்தார்கள்.இது மக்கள் தொகை கணக்கெடுப்பு. இதில் யார் வெளிநாட்டுக்காரர் ? யாரு நம் நாட்டுக்காரர் என்று தெரிந்து கொள்ள வேண்டும். எனவே இது ரொம்ப ரொம்ப முக்கியம் . NCR இன்னும் அமல்படுத்தவில்லை […]

Categories
தேசிய செய்திகள்

மகாத்மா மீது உண்மையான அன்பிருந்தால் அவர்களை நீக்குங்கள்: கே.சி. வேணுகோபால்..!!

மகாத்மா காந்தி மீது பாஜகவினர் உண்மையான அன்பு வைத்திருந்தால், ஆனந்த் குமார் ஹெக்டே, பிரக்யாசிங் தாகூர் ஆகியோரை கட்சியை விட்டுவிலக்கி வைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பரபரப்புகளுக்கிடையே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு  அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாஜகவினர் ஒவ்வொரு நிமிடமும், நொடியும் தேசப்பக்தி குறித்து பாடம் எடுக்கின்றனர். மற்றவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்துகின்றனர். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

பெண் தாசில்தாரை ‘கதாநாயகி’ என அழைத்த முன்னாள் மந்திரி – மராட்டிய பா.ஜனதாவில் சலசலப்பு

பா.ஜனதாவின் முன்னாள் மந்திரி பபன்ரா பெண் தாசில்தாரை ‘கதாநாயகி’ என அழைத்தது  மராட்டிய பா.ஜனதாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய பா.ஜனதாவின் முன்னணி தலைவரும், மாநிலத்தின் முன்னாள் மந்திரியுமான பபன்ராவ் லோனிகர் சமீபத்தில் ஜல்னா மாவட்டத்துக்கு உட்பட்ட பர்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது விவசாயிகள் நிதியுதவி பெறுவது பற்றி பேசினார் . ‘அவ்வாறு அவர் பேசுகையில் அரசிடம் இருந்து ரூ.25 ஆயிரம் நிதியுதவி பெற விவசாயிகள் விரும்பினால், நாம் பர்தூரில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்த […]

Categories
தேசிய செய்திகள்

30,00,00,000 பேர் OK …. 17,58,00,000 பேர் நாட் OK …. மத்திய அரசு அதிகாரபூர்வ தகவல் …!!

நாடு முழுவதும் 30 கோடிப் பேர் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு  நிதித்துணை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலளிக்கையில், ஜனவரி 27-ஆம் தேதி நிலவரப்படி 30 கோடியே 75 லட்சம் பேர் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்திருப்பதாகவும் 17 கோடியே 58 லட்சம் பேரின் பான் எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நிரந்தரக் கணக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன ? பேசி இருக்கீங்க… மக்களவையில் விளாசிய திருமா …. !!

குடியரசுத் தலைவரின் உரை சனாதன அரசை பாராட்டும் விதமாக இருப்பதாக மக்களவையில் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், குடியரசுத் தலைவரின் உரையை விமர்சித்தும் இன்று மக்களவையில் திருமாவளவன் உரையாற்றினார். அப்போது, ” குடியரசுத் தலைவர் கடந்த ஆண்டில் பல புரட்சிகர சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசை பாராட்டியிருக்கிறார். அண்டை நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு இந்த அரசு பாதுகாப்பு வழங்கும் விதமாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது என்று பேசியுள்ளார். ஆனால் நடைமுறையில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

என்னது..!… வேலையில்லையா ? அமைச்சரின் பதிலால் அதிர்ச்சி …!!

வேலையிழப்பு குறித்து மத்திய அரசிடம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் இல்லை என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 2020-2021ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள சரிவை சரிசெய்யும் அளவுக்கு எந்த அம்சமும் பட்ஜெட்டில் இல்லை என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருன்றனர். இது தொடர்பாக கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி சட்டசபை தேர்தல் : வெற்றி பெற்றது யார்?… கருத்துகணிப்பு வெளியீடு..!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 54 முதல் 60 இடங்களைகைப்பற்றக்கூடும் என்று கருத்து கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.  70 தொகுதிகளை கொண்ட தலைநகர் டெல்லி சட்டசபைக்கு வருகின்ற 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை தொடர்ந்து 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக ஆம்ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் யார் மகுடம் சூடப்போகிறார்கள் என்பது 11 ஆம் தேதி தெரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

பொய்யான வார்த்தைகள்….. அதிர்ச்சியில் நிர்மலா சீதாராமன் ..!!

 2020-2021ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பிறகு கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை, இந்த வார தொடக்க நாளான இன்று நிர்மலா சீதாராமனின் வார்த்தையை பொய்யாக்கும் வகையில் பங்குச்சந்தைகள் நிலவரம் உணர்த்துகிறது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மத்திய நிதிநிலை அறிக்கை தாக்குதலுக்குப் பிறகு பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அதன்படி, சென்செக்ஸ் வர்த்தக முடிவின்போது 900 புள்ளிகளுக்கு மேல் கடுமையாகச் சரிந்தது. இதனால் சென்செக்ஸில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் கலக்கமான நிலையில் இருந்தனர். இதனை உணர்ந்த […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ரூ 1,53,000,00,00,000 இழப்பு …. ”பட்ஜெட்டால் வந்த வினை” முணுமுக்கும் அரசுக்குகள் …!!

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமானவரி குறைக்கப்பட்டதால் மாநில அரசுக்கு 1.53 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இந்திய பொருளாதாரம் சரிந்துவரும் நிலையில், கடந்த சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், வருமானவரியில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் எதிரொலியாக மாநிலங்களுக்கு 1.53 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2020 பட்ஜெட்டானது மாநில அரசுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று பொருளாதார […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விஷத்தைப் பரப்பாதீர்கள், பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் – ஓவைஸியைத் தாக்கும் கிரிராஜ் சிங்

பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸியை கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டின் முக்கிய கல்வி நிறுவனங்களான ஜாமியா மில்லியா மற்றும் அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகங்களில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி விஷத்தைப் பரப்பி வருவதாகவும், ஓவைஸி போன்ற ஆட்களுக்காகதான் பாகிஸ்தான் போன்ற நாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஓவைஸியைப் போன்ற பயங்கரவாதிகள் ஜாமியா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி சட்டசபை தேர்தல்: முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

டெல்லியில்  நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில்  முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 8 ம் தேதி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. டெல்லி தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள இந்நிலையில் பிரதமர் மோடியின்  தேர்தல் பிரசாரம் இன்று மாலை 2 மணியளவில் கிழக்கு டெல்லி பகுதியான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் இணைந்த MP…. ”அதிர்ச்சியில் அதிமுக”…. இதுதான் கூட்டணி தர்மமா ?

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா பாஜகவில் இணைத்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை தனது கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள்.ஏற்கனவே நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைத்தார். தற்போது அவர் முக்கிய பொறுப்பில் இருப்பதை நாம் பார்க்க முடிகின்றது. இந்த நிலையில் சசிகலா புஷ்பா அவர்களும் கடந்த 6 மாதமாக பாரதிய ஜனதா கட்சியில் இணையலாம் என்று ஒரு பேச்சு இருந்து வந்த நிலையில் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

Budget2020: ஆட்டோமொபைல் தொழில்துறை பழைய நிலைக்கு திரும்புமா?

2020ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ள நிலையில், ஆட்டோமொபைல் துறை மீண்டும் எப்போது வளார்ச்சி பாதைக்கு திரும்பும் என்பது பற்றிய நிபுணர்களின் கருத்து. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020-21ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுகுறித்து ஹூண்டாய் துணை தலைவர் பிசி தத் நமது ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினருக்குமான பட்ஜெட்டாக உள்ளது. விவசாயத் துறைக்கு பெரும் உந்துதலை கொடுக்கும் என […]

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட்டின் தாக்கத்தை உணர திங்கள் வரை காத்திருங்கள்: நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டின் தாக்கத்தை கார்ப்பரேட் துறையில் உணரவேண்டும் என்றால் நாம் அனைவரும் திங்கள்கிழமை போன்ற சாதாரண வர்த்தக நாள் வரை காத்திருக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2020-21ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கிடையே மத்திய பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் கார்ப்பரேட் துறையில் எவ்வித ஏற்றங்களும் இன்று ஏற்படவில்லை. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “மத்திய பட்ஜெட்டின் தாக்கத்தை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிஏஏவுக்கு எதிராக போராடுபவர்களின் மூதாதையர்கள் நாட்டை பிளவுபடுத்தியவர்கள்’

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களின் மூதாதையர்கள்தான் நம் நாட்டை பிளந்தவர்கள் என்று யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என முப்முனை போட்டி நிலவுவதால், அனைத்துக் கட்சி தலைவர்களும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

#Budget2020 : மிக நீண்ட உரை…. ஆனால் வெற்று உரை… ராகுல் விமர்சனம்..!!

மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் நீண்ட நேரம் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பட்ஜெட் குறித்து கருத்து கூறியதாவது, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”பத்தரை மாற்றுத் தங்கம், சந்தேகப்படாதீங்க” மோடியை புகழ்ந்து தள்ளிய ராஜ்நாத் சிங் …!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி பத்தரை மாற்றுத் தங்கம்; அவரது எண்ணங்களை சந்தேகப்பட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜகவுக்கு ஆதரவாக மெஹ்ரௌளியில் பரப்புரை மேற்கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இஸ்லாமியர்களிடையே எதிர்க்கட்சியினர் தவறான புரிதலை உருவாக்கிவருகிறனர். நம் இஸ்லாமிய தோழர்களை நோக்கி யாரும் கைநீட்ட மாட்டார்கள். நம் பிரதமர் பத்தரை மாற்றுத் […]

Categories
தேசிய செய்திகள்

2020-21 மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்… எப்படி இருக்கும் அறிவிப்பு ?

மத்திய அமைச்சரவை கூட்டம் , குடியரசுத்தலைவருடன் சந்திப்பு என்று இரண்டு சம்பிரதாயங்களை கடந்து இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகின்றது. 2020 ஆம் வருடத்துக்கான பட்ஜெட் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு காரணம் என்னவென்றால் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலே பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச ரீதியாகவும் சரி , இந்தியாவிலும் சரி வளர்ச்சி விகிதம் குறைந்து வருவது நன்றாக அறிந்ததே. 5 சதவீதம் வளர்ச்சி என்பது இந்தியாவைப் பொருத்தவரை மிகவும் குறைவானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

நரேந்திர மோடி அரசில் நிதியமைச்சராக அங்கம் வகிக்கும் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆறாண்டுகளாக கண்டிராத வகையில் சரிந்துள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நாட்டின் வரவு-செலவு திட்ட நிதிநிலை அறிக்கையானது, சரிந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறியும் வகையில் அமைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திரா காந்திக்கு பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

நிதி அமைச்சர்களில் அதிகமுறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தவர்கள் யார்?

இந்திய நிதி அமைச்சர்களில் மொரார்ஜி தேசாய் பத்து முறையும், ப. சிதம்பரம் ஒன்பது முறையும், எட்டு முறை பிரணாப் முகர்ஜியும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும், யஷ்வந்த் சின்ஹா, மன்மோகன் சிங் ஆகியோரும் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்து இருக்கின்றனர். இந்திய அரசின் நிதி அமைச்சகம் என்பது ஒட்டுமொத்த தேசத்திற்கான வரவு செலவுகளை தீர்மானிக்கும் துறையாகும். விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நிதித்துறை அமைச்சராக ஆர். கே. சண்முகம் பணியாற்றினார். தமிழகத்தைச் சேர்ந்தவரான ஆர். கே. சண்முகம் […]

Categories
தேசிய செய்திகள்

வளர்ச்சி சார்ந்த பட்ஜெட், பொருளாதார ஆய்வறிக்கை சமிக்ஞை!

ஹைதராபாத்: பொருளாதார ஆய்வுகளின் முன்னறிவிப்பு சமிக்ஞைகளை பார்க்கும்போது, 2020ஆம் ஆண்டு பட்ஜெட் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்ரவரி 1) பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் இரண்டாவது பொது பட்ஜெட் இது. முன்னதாக இன்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கலானது. அந்த ஆய்வறிக்கையில், திருக்குறள் மற்றும் அர்த்தசாஸ்திரத்தின் பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன. பொருள் சேர்த்தல் குறித்து திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. திருவள்ளுவர் குரல் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பைக்…. சைக்கிள்…. ரூ 2க்கு கோதுமை …. பாஜக தேர்தல் அறிக்கை ..!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக தனது தேர்தல் அறிக்கையை  வெளியிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பாஜக தேர்தல் அறிக்கையில்  பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட இருக்கின்றது. டெல்லியில் கல்லூரி மாணவிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

”பாஜகவில் சாய்னாக்கு பதவி” – தலைவர்கள் கருத்து …!!

சாய்னாவுக்குப் பொருத்தமான பதவியை பாஜக நிச்சயம் வழங்கும் என தெலங்கானா மாநில பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் புதன்கிழமை பாஜகவில் இணைந்தார். இதுகுறித்து தெலங்கானாவில் உள்ள பாஜக பிரமுகர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்துவருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த தெலங்கானா பாஜக தலைவர் கே.லக்ஷ்மன், ‘சாய்னா போன்ற பிரபலங்கள் பாஜகவில் இணைவது மோடி ஆட்சியின் செயல்திறனை குறிக்கிறது’ என்றார். மேலும், பாஜகவின் ஹைதராபாத் பிரிவு தலைவர் என்.ராமசந்தர், ‘சாய்னாவுக்குப் பொருத்தமான பதவியை பாஜக வழங்கும்’ […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி ஜாமியா பல்கலை துப்பாக்கிச் சூடு : ப.சிதம்பரம் கண்டனம்..!!

டெல்லி ஜாமியா பல்கலைகழகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள  ஜாமியா பல்கலைக்கழத்தில் CAA சட்டத்திற்கு  எதிரான போராட்டத்தில் மாணவர்கள் நேற்று ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். இந்த போராட்டத்திற்கு இடையே அங்கே வந்த மர்மநபர் ஒருவர் கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வானத்தை நோக்கியும் , மாணவர்களை நோக்கியும் சுட்டுள்ளார். இதில் ஒரு மாணவர் காயமடைந்துள்ளார். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்து அவர் யார் […]

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட்டுக்கு ஒரு நாள் முன் 78,300 ஊழியர்களுக்கு ஓய்வு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வரலாறு காணாத அளவு  ஒரே நாளில் 78,300 பேர் ஓய்வு பெறவுள்ளனர். கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பிஎஸ்என்எல் மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களை மீட்க, இவ்விரு நிறுவனங்களையும் இணைக்கும் திட்டத்திற்கும், அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்திற்கும் மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை டிசம்பர் 3ஆம் தேதி வரை ஊழியர்கள் தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 78,300 பேரும், […]

Categories
மாநில செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 40 கிமீ தூர மனித சங்கிலி!

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மனித சங்கிலியின் ஒரு பகுதியாக சென்னையில் 40 கிமீ தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து தமிழக ஒற்றுமை மேடை சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்ட இம்மனித சங்கிலியில் தமிழகத்தின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நான் மகனா? சகோதரானா? பயங்கரவாதியா ? மக்கள் முடிவு செய்வர்கள் – கெஜ்ரிவால்

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் நான் அவர்களின் மகனா? அல்லது பயங்கரவாதியா? என்று முடிவு செய்வார்கள் என அம்மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல் : பாஜக நட்சத்திர பேச்சாளர்களுக்கு தடை ….!!

சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களான அனுராக் தாகூர், பர்வேஷ் வெர்மா ஆகியோருக்கு பரப்புரையில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையின்போது விதிகளை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஜாமியா பல்கலை.யில் துப்பாக்கிச் சூடு….!!

ஜாமியா பல்கலைகழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள  ஜாமியா பல்கலைக்கழத்தில் CAA சட்டத்திற்கு  எதிரான போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கே வந்த மர்மநபர் கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வானத்தை நோக்கியும் , மாணவர்களை நோக்கியும் சுட்டதாக  அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒரு மாணவர்கள் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்து அவர் யார் ? என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”மதத்தை அளவுகோலாக வைக்கும் பாஜக”திருமாவளவன் ஆவேசம் …!!

மதத்தை அளவுகோலாக வைத்திருக்கிறது பாஜக அரசு என்று திருமாவளவன்  ஆவேஷமாக தெரிவித்துள்ளார். திருமாவளவன் பேசுகையில்  , சிஐஏ எதிர்ப்பதற்கு முக்கியமான காரணம் மதத்தை அளவுகோலாகக் கொண்டு இந்த சட்டம் இயக்கப்பட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த ஒரு யுத்தியாகவே இதை கையாளுகிறது பிஜேபி. இதுவரை எந்த அரசும் , எந்த காலத்திலும் மதத்தை ஒரு அளவுகோலாக யாரும் கையாண்டது இல்லை. அகதிகளாக வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

‘மோடி 2.0’ அது நிர்மலாவுக்கு சோதனைக்காலம்: பட்ஜெட் 2020இல் அதைச் செய்யுங்க ஃபர்ஸ்ட்!

நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கான பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டாவது பதவிக்காலத்தில் வழங்கியுள்ளார். இந்தியப் பொருளாதாரம் தள்ளாடும் நிலையில், மத்திய அரசு வருவாயை அதிகரிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்குமா கேள்வி நிலவிவருகிறது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் கிருஷ்ணானந்த் திரிபாதி எழுதிய சிறப்பு கட்டுரை இதோ… வரும் பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

போக்சோ வழக்கை விரைந்து முடிக்க மாநிலங்களுக்கு உள் துறை அமைச்சர் வலியுறுத்தல்..!!

போக்சோ சட்டத்தின்கீழ் உள்ள வழக்கு விசாரணையை இரண்டு மாத காலங்களுக்குள் முடிக்கமாறு மாநில முதலமைச்சர்களை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுகொண்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் மத்தியப் பிராந்திய கவுன்சிலின் 22ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்தியப் பிராந்திய கவுன்சிலில் இடம்பெற்றுள்ள மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர், ஒவ்வொரு மாநிலங்களிலிருந்தும் 2 அமைச்சா்கள், தலைமைச் செயலர்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர். இந்தச் சந்திப்புக்கு உள் துறை அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

பிரியாணி அல்ல… இவர்களுக்கு புல்லட் தான் கிடைக்கும்… கர்நாடக பாஜக அமைச்சர்..!!

தேசிய விரோதிகளுக்கு புல்லட் தான் கிடைக்கும், பிரியாணி அல்ல என்று கர்நாடக பாஜக அமைச்சர் சி.டி ரவி அனுராக் தாக்கூருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.  டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மணிஷ் சவுத்ரிக்கு ஆதரவு தெரிவித்து, […]

Categories
தேசிய செய்திகள் பேட்மிண்டன் விளையாட்டு

அக்கா….. தங்கை… ”கொத்தாக தூக்கிய பாஜக” கெத்தாக இணைந்த சாய்னா ….!!

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது தன்கையுடன் பாஜக கட்சியில் இணைந்தார். இன்று காலை முதல் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் முக்கியமான நபர் ஒருவர் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.ஏற்கனவே பாஜகவின் மூத்த தலைவர்கள் இவருடன் தொடர்ச்சியாக ஒரு ஆலோசனை நடத்தினர். அதே நேரத்தில் வருகிற பிப்ரவரியில் டெல்லியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த […]

Categories
தேசிய செய்திகள் பேட்மிண்டன் விளையாட்டு

BREAKING : பாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால் ….!!

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜக கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இன்று காலை முதல் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் முக்கியமான நபர் ஒருவர் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.ஏற்கனவே பாஜகவின் மூத்த தலைவர்கள் இவருடன் தொடர்ச்சியாக ஒரு ஆலோசனை நடத்தினர். அதே நேரத்தில் வருகிற பிப்ரவரியில் டெல்லியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலிலும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இஸ்லாமிய பயங்கரவாதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர் – ஹெச்.ராஜா

தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர்  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் பாலக்கரை மண்டலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் விஜயரகு அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஹெச்.ராஜா  50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா தமிழகத்தில் நடக்கும் பயங்கரவாத செயல்களை காவல்துறையினர் புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

‘விஜய்ரகு கொலைக்கு திருமாவளவன் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?’ – ஹெச். ராஜா

பட்டியலினத்தைச் சேர்ந்த பாஜக செயலாளர் விஜய்ரகு கொலைக்கு ஏன் திருமாவளவன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கேள்வியெழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை போர்வையாகப் பயன்படுத்தி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் வன்முறையை ஏற்படுத்துகின்றன நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்களின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திருக்குறள் வைத்திருப்பவன் தான் அறிவாளி – சீமான் பேட்டி..!!

திருக்குறள் வைத்திருப்பவன் தான் அறிவாளிஎன்றும்  துக்ளக் வைத்திருப்பவன் அறிவாளி அல்ல என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் துக்ளக் படித்தால் அறிவாளி என்றால், நீட்தேர்வு படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டியது தானே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் குடியுரிமை சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல மனித குலத்திற்கு எதிரானது என விமர்சித்த அவர் அண்டைநாட்டில் இருந்து வருவோரை அகதிகளாக […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பா.ஜ.க நிர்வாகி விஜயரகுவின் குடும்பத்திற்கு ரூ 50,000 நிதி உதவி..!!

திருச்சியில் கொலை செய்யப்பட்ட பா.ஜ.க நிர்வாகி விஜயரகுவின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டம் பாலக்கரை பாஜக மண்டலத் துணைத் தலைவர் விஜயரகு என்பவர் காந்தி மார்க்கெட் சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு என்ற முகமது பாபு என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே குற்றவாளிகளை சீக்கிரமாக […]

Categories
தேசிய செய்திகள்

நகைச்சுவை நடிகர் குணால் கம்ராஇண்டிகோ விமானத்தில் பயணிக்க 6 மாதங்கள் தடை..!

நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவை 6 மாதங்கள் இண்டிகோ விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா மும்பையில் இருந்து லக்னோவுக்கு அண்மையில் இன்டிகோ விமானத்தில்  பயணம் செய்தார். அப்போது அவருடன் அர்ணாபும் பயணித்துள்ளார், இதுகுறித்த வீடியோ ஒன்றை குணால் வெளியிட்டுள்ளார், அப்போது அர்னாப் கோஸ்வாமியிடம் குணால் கம்ரா பல கேள்விகளை கேட்டுள்ளார்.  ஆனால் அர்னாப் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாதது போல் இருக்கிறார். மேலும் நீங்கள் கோழையா.. இல்லை தேசியவாதியா […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பட்ஜெட் 2020: ‘சாமானியர்களின் பணப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்

பொருளாதார மந்த நிலையை சரிசெய்யவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலை அறிக்கையில் சாமானியனின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் சேகர் ஐயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய சிறப்பு கட்டுரை இதோ..  இந்திய மக்களின் பார்வை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ள இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீது தான் இருக்கும் என்றே சொல்லலாம். […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவம் பாகிஸ்தானை தோற்கடிக்க 10 நாள்களே போதும்..!

இந்தியா பாகிஸ்தான் இடையே போா் ஏற்பட்டால்  இந்திய ராணுவத்தினா் பாகிஸ்தானை தோற்கடிக்க 10 நாள்களே போதும் என்று  இந்திய பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். தில்லியில் செவ்வாய்க்கிழமை தேசிய மாணவா் படையின் (என்சிசி) வருடாந்திர பேரணி நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி பேசியதாவது: அண்டை நாடுகளில் வசித்து வரும் சிறுபான்மை மக்களுக்கு வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதியைத் திருத்தவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு இயற்றியதாகவும் அவா் கூறினாா். நம் நாட்டில் பல ஆண்டுகளாக  நிகழ்ந்துவரும்  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக ஆட்சி…… ”ஓருத்தன் கூட இருக்க மாட்டான்”….. பாஜக MP பர்வேஷ் வர்மா சூளுரை ..!!

சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் அடுத்த நாளே ஷாஹீன் பாக்கில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா சூளுரைத்துள்ளார். டெல்லியில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பாஜகவை ஆதரித்து டெல்லி விகாஸ்பூரி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “ஷாஹீன் பாக் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கின்றனர். அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்களது சகோதரிகளையும், மகள்களையும் பாலியல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் – பாஜக எம்.பி பர்வேஸ் வர்மா சர்ச்சை பேச்சு…!

துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதால் எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள் பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் என்று பாஜக பாரதிய ஜனதா எம்பி கூறியிருப்பது மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது. பாரதிய ஜனதாவை சேர்ந்த டெல்லி மேற்கு தொகுதி எம்பியான பர்வேஸ் வர்மாவின் மத மோதலை உண்டாக்கும் இந்த சர்ச்சை கருத்தை கூறியுள்ளனர். விகாஸ் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுப் பேசிய பர்வேஸ் வர்மா டெல்லியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் அரசு […]

Categories

Tech |