Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கண்ணை கட்டிக் கொண்டு …. வாயை பொத்திக் கொண்டு…. எம்.பிக்கள் போராட்டம் ….!!

மக்களவையின் முன்புள்ள காந்திசிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். CAAக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து காவலர் , உளவுத்துறை அதிகாரி  உட்பட 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு பாஜகவின் கபில்மிஸ்ரா பேச்சு தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இன்று தொடங்கியுள்ள மக்களவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசவும் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த வன்முறைக்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் , […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTNOW : மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு …..!!

எதிர்க்கட்சியின் அமளியின் காரணமாக மக்களவை கூட்டத்தொடர் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று மக்களவை , மாநிலங்களவையின் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் டெல்லி வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்படுள்ளது. பாராளுமன்றம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள காந்தி சிலை அருகே ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினார்கள். டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

”370 சட்டப்பிரிவு இரத்து” 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற மறுப்பு ….!!

370 சட்டப்பிரிவு இரத்து தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 மூலம் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்புத் தகுதிகள் வழங்கப்பட்டு வந்தது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை கொண்டு வந்து அம்மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதிகளை மத்திய அரசு நீக்கியது. இதையடுத்து சிறப்பு சட்டம் நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரித்து […]

Categories
தேசிய செய்திகள்

இவங்க இருந்தா….. நான் இருக்க மாட்டேன்….. பாஜகவில் இருந்து பிரபல நடிகை விலகல்….!!

மேற்கு வங்கத்தில் பிரபல நடிகை பாஜக கட்சியில் இருந்து அதிரடியாக நீங்கிவிட்டார்.  மேற்கு வங்கத்தில் பிரபல நடிகையும் சீரியல் ஆர்டிஸ்டுமான சுபத்ரா முகர்ஜி கடந்த 2013 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இவர் தற்போது கட்சியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். அதற்கான காரணமாக அவர் கூறியதாவது, அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மக்கள் வெறுக்கத்தக்க கருத்துக்களை பகிரங்கமாக தெரிவித்து அதற்கு மன்னிப்பும் கேட்காமல் இருந்து வருகின்றனர். கட்சியும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரஜினியிடன் இஸ்லாமிய மதகுருமார்கள் சந்திப்பு ….!!!

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் இல்லத்தில் சந்தித்து பேசி வருகின்றனர். CAA சட்டம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்து அதிர்ச்சியளிப்பதாக இஸ்லாமிய மதகுருமார்கள் கூறியுள்ள நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடைபெற்று வருகின்றது. குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து நடிகர் ரஜினிகாந்துக்கு விளக்கம் தர சந்தித்து பேசி வருகின்றனர். முன்னதாக நேற்று நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரஜினியின் வாய்ஸ் இஸ்லாமியர்களின் நம்பிக்கை – அபுபக்கர்

ரஜினியின் குரல் இஸ்லாமிய மக்களின் மனதில் நம்பிக்கை அளித்துள்ளது என்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இல்லத்ரத்திற்கு சென்று அவரை சந்தித்ததற்கு பின் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ,  இஸ்லாமிய மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று சொன்னது 30 கோடி இஸ்லாமிய மக்களின் மனதில் நம்பிக்கை கொடுத்துள்ளது. அவர் டெல்லி கலவரத்துக்கு குரல் கொடுத்ததற்கு […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள்

பாஜக பேரணிக்கு மிரட்டல் – போலீசார் சோதனை ..!

மதுரையில் நடைபெற இருந்த பாஜக பேரணி நடைபெற இந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல பல பகுதிகளில் பாஜகவினர் போராட்டத்திற்கு எதிராகவும் , CAA சட்டத்திற்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜக சார்பில் இன்று மாலை CAAக்கு ஆதரவாக மதுரையில் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதனால் மதுரை […]

Categories
அரசியல்

இதோ பாருங்க நல்லதுக்கு இல்ல….. மலிவான அரசியல் வேண்டாம்….. ரஜினிக்கு பாஜக எச்சரிக்கை….!!

மத்திய அரசை எதிர்க்கும் ரஜினியின் அரசியல் அவரது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என தமிழக பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகர் தெரிவித்துள்ளார். மத்திய அரசை எதிர்க்கும் ரஜினியின் அரசியல் அவரது அறியாமையை காட்டுகிறது என்று பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகர் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக மத அரசியலை செய்யவில்லை. இவ்வாறான கருத்துக்களை கூறி மலிவான அரசியலை ரஜினிகாந்த் அவர்கள் செய்யாமலிருப்பது நல்லது. மீண்டும் இதுபோன்ற கருத்துக்களை அவர் தெரிவித்தால் அது அவரது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று […]

Categories
மாநில செய்திகள்

அடுத்தடுத்து 2 ட்வீட்….. ”பட்டைய கிளப்பும்திரெளபதி”…. எச்.ராஜா கொடுத்த சர்டிபிகேட் …!!

திரெளபதியின் பெயரை கேட்டாலே சிலருக்கு பயம் வரும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். திரெளபதி திரைப்படம் நாளை வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கான சிறப்பு கட்சி இன்று ஒளிபரப்பப்படுகின்றது. இதனை பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தோடு , பெற்றோர்கள் தன் வயதிற்கு வந்த மகளோடு பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம் […]

Categories
மாநில செய்திகள்

பெண் பிள்ளைகள் திரெளபதியாக வாழ வேண்டும் – எச்.ராஜா

திரெளபதியின் பெயரை கேட்டாலே பலர் நடுங்குகின்றார்கள் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். திரெளபதி திரைப்படம் நாளை வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கான சிறப்பு கட்சி இன்று ஒளிபரப்பப்படுகின்றது. இதனை பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தோடு , பெற்றோர்கள் தன் வயதிற்கு வந்த மகளோடு பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம். எத்தனை பெண் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரவிட்ட நீதிபதி…. பந்தாடிய பாஜக…. தொடரும் சர்சை…. பாஜக விளக்கம் …!!

டெல்லி வன்முறை தொடர்பாக பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம் ஏற்பட்டுள்ளது. டெல்லி வன்முறை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் சில மணி நேரங்களில் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக நிர்வாகிகள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் நேற்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை : ”காங்கிரஸ் , ஆம் ஆத்மி கட்சி தான் காரணம்” பிரகாஷ் ஜவடேகர் குற்றசாட்டு …!!

டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தான் காரணம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டினார். டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தத்த்து. இதில் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறைக்கு பாஜகவினரின் பேச்சே கரணம் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக வன்முறை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குடியரசுத்தலைவரை சந்தித்தார். இதை தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை – ”FIR பதிவு செய்ய முடியாது” நீதிமன்றத்தில் போலீஸ் தகவல் …!!

டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசி அதற்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்ய இயலாது என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக தலைவர்அனுராக் தாகூர், கபில் மிஸ்ரா , பர்வேஷ் வர்மா மீது நடவடிக்கை கோரி மனுத்தாக்கல்  நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த போது , தற்போதைய சூழலில் FIR  பதிவு செய்தால் இயல்பு நிலை திரும்ப […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுக்கு எதிரான ”சக்திவாய்ந்த முதல்வர் பினராய் விஜயன்” நாராயணசாமி புகழாரம் ….!!

பினராய் விஜயன் மிகப்பெரிய சக்தி வாய்ந்த முதலமைச்சராக விளங்குவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்து 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கேரளா போன்ற பல்வேறு மாநில சட்டமன்றத்தில் இதனை கண்டித்து தீர்மானம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிகாரத்துக்கு வர என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்…. பாஜகவை சீண்டிய நாராயணசாமி …..!!

அதிகாரம் வேண்டுமானால் பாஜகவினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று புதுவை முதல்வர் எச்சரித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், CAA சட்டத்தை எதிர்த்து பாஜக கூட்டணியில் உள்ள அகாலிதளம் இந்த சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறுகிறார்கள். பீகாரில் பாஜக கூட்டணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடிக்கு 3 விஷயம் சொல்கிறேன் – அறிவுறுத்திய புதுவை முதல்வர் ..!!

CAAவை எதிர்த்து மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், தமிழ்நாட்டில் ஒரு முதலமைச்சர் இருக்கிறார். மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களுக்கு அதிகாரம் இல்லை…. எங்களுக்கு சொல்லாதீங்க – புதுவை முதல்வர் ஆவேசம் …!!

மதம் குறித்து மோடியோ , அமித்ஷாவோ எங்களுக்கு சொல்லி கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் கலந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், இந்த நாட்டில் 7 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. புதுச்சேரி மற்றும் டெல்லியில் சட்டமன்ற உள்ள யூனியன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பாஜகவுக்கு முட்டு கொடுக்கின்றது – நாராயணசாமி விமர்சனம் …!!

CAA சட்டம் நிறைவேற்ற அதிமுக பாஜகவுக்கு முட்டு கொடுத்துள்ளது என்று நாராயணசாமி விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் கலந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில் , CAA சட்ட மசோதா மக்களவை நிறைவேற்றி மாநிலங்களவைக்கு வந்தபோது அதற்கு பெரும்பான்மை இல்லாத நேரத்தில் அதிமுக உறுப்பினர்கள் முட்டுக் கொடுத்து பாராளுமன்ற மேலவையில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மன்னிப்பு கேளுங்க…. ஜெயிலுக்கு போயிருவீங்க…. EPSயை விளாசிய ஸ்டாலின் …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டுமென்று முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் , அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த அனுமதிக்க கூடாது என்று நான் சட்டமன்றத்திலே கேட்டேன். குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று முதலவர் எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சபாஷ் நண்பா, அப்படி வாங்க… இது தான் தனி வழி ….. கைகோர்த்த கமல் …!!

டெல்லி வன்முறை குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு கமல் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில்  நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , டெல்லி வன்முறைக்கு  மத்திய அரசு உளவுத்துறையின் தோல்வியே காரணம்.நான் பாஜகவில் ஊதுகுழல் என்கிறார்கள். மதத்தை வைத்து அரசியல் செய்வது வன்மையாக கண்டிக்கின்றேன். அறவழியில் போராடலாம் , ஆனால் போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது .வன்முறையை ஒடுக்கவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பாஜகவை கண்டித்து பேசியுள்ளார். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இது கூரான கத்தி…. பதம் பார்க்கும்…. பசி தீராது…. முக.ஸ்டாலின்  கண்டனம் …!!

மதமும் , ஜாதியும்  இரு கூரான கத்திகள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் , மதமாக இருந்தாலும் சரி , சாதியாக இருந்தாலும் சரி அது இரண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முஸ்லீம் மக்களுக்கு பாதிப்பு…. எடப்பாடி ஒப்புதல் வாக்குமூலம் ….. ஸ்டாலின் விமர்சனம் …!!

CAA , NPR சட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு இருக்கின்றது என்று முதல்வர் ஒப்புதல் அளித்ததாக முக.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று முதலவர் எடப்பாடி […]

Categories
அரசியல் சற்றுமுன்

இந்துக்களுக்காக அவதாரம் எடுத்தவர்கள் எங்கே ? முக.ஸ்டாலின் கேள்வி …!!

இந்துக்களை பாதுகாக்க பிறந்தவர்கள் என்று சொல்பவர்கள் எங்கே சென்றார்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், குடியுரிமை  சட்டத்திற்க்கெதிரான போராட்டம் என்பது முஸ்லீம் மக்களுக்கானது அல்ல. இந்தியர்களை கக்கூடிய  போர் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டைப் பாதுகாக்க…. எல்லை தாண்டி தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் – ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

நாட்டைப் பாதுகாக்க  எல்லையைத் தாண்டி சென்று தாக்குதல் நடத்த நாங்கள் தயங்குவதில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு  பகுதியான  பாலகோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய 3 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடியுரிமை போராட்டம் : இந்தியர்களை பாதுகாக்கக்கூடிய போர் – முக.ஸ்டாலின் கருத்து …!!

குடியுரிமை சட்ட போராட்டம் என்பது இந்தியர்களை பாதுகாக்கக்கூடிய போர் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் , இது முஸ்லீம் மக்களுக்கான பிரச்சினை மட்டும் அல்ல. ஒட்டு மொத்த நாட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”ராஜினாமா செய்யுங்கள்” பாஜக மீது பாய்ந்த ரஜினிகாந்த் …!!

டெல்லி வன்முறை சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசை கண்டித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில்  நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , டெல்லி வன்முறைக்கு  மத்திய அரசு உளவுத்துறையின் தோல்வியே காரணம். போராட்டத்தை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் . ட்ரம்ப் போன்ற தலைவர்கள் வரும் நேரத்தில் போராட்டத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். நான் பாஜகவில் ஊதுகுழல் என்கிறார்கள். நான் உண்மையை சொல்கிறேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கீரிப்பிள்ளையின் வாயில் கோழியாக அதிமுக – தமிமுன் அன்சாரி

கீரிப்பிள்ளையின் வாயில் கோழி சிக்கியது போல் அதிமுகவினர் சிக்கியுள்ளனர் என மனிதநேய ஜனதா கட்சி எம்எல்ஏ தெரிவித்துள்ளார் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் கீரிப்பிள்ளை வாயில் சிக்கிக்கொண்ட கோழியைப் போல அதிமுக அரசு உள்ளது என மனிதநேய ஜனதா கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது “இந்த சட்டங்கள் CAA , NRC குறித்து அதிமுக தலைவர்களுக்கு சரியான புரிதல் இல்லை எனவே அதிமுகவினர் அரசியல் நெருக்கடியால் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்திலும் தீர்மானம்…. EPSயின் திடீர் முடிவால் பாஜக அதிர்ச்சி ….!!

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமுல்படுத்தப்பபோவதில்லை என்ற தீர்மானம் பரிசீலனையில் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உட்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. கடந்த 3 நாட்கள் நடைபெற்று வரும் வன்முறையில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 160க்கும் அதிகமானோர் வன்முறையால் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டிலும் வண்ணாரப்பேட்டையில் CAAக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகின்றது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் , தமிழ்நாட்டைப் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லியில் வன்முறை….. 10 இடங்களில் 144 தடை உத்தரவு ….!!

டெல்லி வன்முறை சம்பவத்யடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. வடக்கு டெல்லியின் யமுனா விகார் , […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : வன்முறை , துப்பாக்கிசூடு – டெல்லி விரையும் மோடி , அமித்ஷா …!!

டெல்லி வன்முறை சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் மோடியும் , உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் டெல்லி விரைகின்றனர்.  மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”வன்முறையை உடனே கட்டுப்படுத்துங்க” கெஜ்ரிவால் ட்வீட் …!!

வன்முறையை உடனே கட்டுப்படுத்த வேண்டுமென்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லியில் வன்முறை – போலீசார் துப்பாக்கிச்சூடு …!!

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில் அவரின் மனைவி டெல்லியில் உள்ள ஒரு பள்ளிக்கு செல்ல […]

Categories
அரசியல்

அத்தைகளுக்கு ஆபத்து…! ஆபத்து….! CPIM மூத்த தலைவர் கருத்தால் சர்ச்சை…..!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அருணன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பேராசிரியர் அருணன் மேற்குவங்க பாஜக தலைவரை கிண்டலடித்தும்,  விமர்சித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்திய பசுக்கள் அனைத்தும் நமக்கு தாய். வெளிநாட்டு பசுக்கள் அனைத்தும் நமக்கு அத்தை. இந்திய பசுக்களை தாய்போல் கருதி பேணி பாதுகாத்து வளர்க்க வேண்டியது நமது கடமை. வெளி நாட்டு பசுக்களான   அத்தைகளை […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10,00,000 தாரேன்…. தலையை வெட்டுங்க…. கொல்லுங்க …. ஸ்ரீராம் சேனா அறிவிப்பு …!!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவியின் தலைக்கு 10 லட்சம் நிர்ணயம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20ஆம் தேதி AIMIM கட்சி சார்பாக நடந்த போராட்டத்தில் மேடையில் பேசுவதற்காக வந்த மாணவி ஒருவர் மேடையில் ஏறியதும் பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்டார். இது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது. இதையடுத்து கைது […]

Categories
தேசிய செய்திகள்

இது குளிர்காலம்…. சிலிண்டர் விலை உயர்வுக்கு.. அமைச்சரின் புது விளக்கம் ….!!

குளிர்காலம் என்பதால் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைப்பதை போல சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.  மாதந்தோறும் மாற்றிய அமைக்கப்படும் சிலிண்டர் எரிவாயு விலை நடந்து முடிந்த தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடையும் வரை ( அதாவது 2019 டிசம்பர், 2020 ஜனவரி வரை )  2 மாதங்கள் விலை உயரவில்லை. தேர்தல் முடிந்ததும் சமையல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முஸ்லிம்களை நாங்கள் விடமாட்டோம் – திருமாவளவன் ஆவேசம் …!!

முஸ்லீம் மக்களை தனிமை படுத்த விடுதலை சிறுத்தைகள் விடாது என திருமாவளவன் உறுதியளித்துள்ளார். நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தேசம் காப்போம் என்ற முழக்கத்தில் பேரணி நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்  பங்கேற்றார்.இதில் குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு , தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை இரத்து செய்ய வேண்டும், இட ஒதுக்கீடு உரிமை பாதுகாத்திட வேண்டும்  என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பேசிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அது ஒரு மிஸ்டு கால் கட்சி…. ”மிஸ்டு கால் தலைவரை தேடுது”…. தெறிக்கவிட்ட வீரமணி …!!

பாஜக ஒரு மிஸ்டு கால் கட்சி என்பதால் தமிழ்நாட்டில் அக்கட்சிக்கான மிஸ்டு கால் தலைவரை தேடுவதாக திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி  விமர்சித்துள்ளார். திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி செய்தியாளர்களை சந்தித்த போது , மோடியை விமர்சித்தால் ஸ்டாலினால் முதல்வராக முடியாது என பா.ஜ.கவின் முரளிதர ராவ் கூறியுள்ளது, தன்னுடைய பதவியை தக்கவைத்துக் கொள்ள என்று குற்றம் சாட்டினார். மேலும் பாஜகவை கடுமையாக சாடிய அவர் ,தமிழ்நாட்டில் தலைவரை நியமனம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”இம்ரான்கானின் கைக்கூலி ஸ்டாலின்” வெளுத்து வாங்கிய பாஜக ….!!

பாகிஸ்தான் பிரதமரின் கைப்பாவையாக முக.ஸ்டாலின் செயற்படுகின்றார் என்று பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் குற்றம் சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுக் கட்சிகளில் உள்ளவர்கள் அங்கிருந்து விலகி பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றதது. இதில் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி, பா.மாக_வின் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சிவகுமார் , மீசை அர்ஜூனன் உள்ளிட்டோர்  பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் , முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். […]

Categories
அரசியல்

அரசியல் வேண்டாம்….. வனவாசம் போறேன்…. ஸ்டாலினுக்கு சவால் …!!

CAAவால் இஸ்லாமியர் பாதிக்கப்படுவார்கள் என ஸ்டாலின் நிரூபித்தால் நான் வனவாசம் செல்ல தயார் என்று பாஜகவின் முரளிதர ராவ் சவால் விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுக் கட்சிகளில் உள்ளவர்கள் அங்கிருந்து விலகி பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றதது. இதில் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி, பா.மாக_வின் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சிவகுமார் , மீசை அர்ஜூனன் உள்ளிட்டோர்  பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் , முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மைதானத்தை டிரம்ப் திறக்கலை…. திடீர் மாற்றம் ஏன் ? வெளியுறவுத்துறை விளக்கம் …!!

அகமதாபாத் வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மோதேரா மைதானத்தை திறந்து வைக்கப்படுவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக இணைய உள்ள அகமதாபாத் மோதேரா கிரிக்கெட் மைதானத்தை  கிரிக்கெட் மைதானத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திறந்து வைக்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாள் அரசு முறை பயணமாக திங்கட்கிழமை இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் இணைந்து மோதேராமை தானத்தை பார்வையிட மட்டுமே செய்வார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடியுடன் சந்திப்பு…. ”யு டர்ன் அடித்த சிவசேனா”…. கூட்டணிக்குள் உரசல் …!!

மஹாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா , காங்கிரஸ் கூட்டணிக்குள் உரசல் முற்றியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த CAA , NPR , NRC ஆகிய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஆதரவு குரல் எழுப்பி வருகின்ற நிலையில் , பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டமசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்ட்டுள்ளது. சிவசேனா தலைமையிலான காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் கூட்டணிஆட்சி நடந்து வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதே கோஷம்…. ”சிக்கிய மற்றொரு மாணவி”….. பெங்களுருவில் பரபரப்பு …!!

பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனக் கோஷமிட்ட அமுல்யாவிற்கு எதிராக பெங்களுருவில் நடந்த போராட்டத்தில் மற்றொரு மாணவியும் அதே கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று AIMIM கட்சி சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் AIMIM கட்சி தலைவர் ஒவைசி பங்கேற்றார்.அப்போது மேடையில் பேசுவதற்காக வந்த அமுல்யா என்ற மாணவி ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

‘பாகிஸ்தான் வாழ்க’ கோஷமிட்ட மாணவி…… ஆப்பு வைத்த நீதிமன்றம் …!!

ஓவைசி தலைமையில் நடத்தப்பட்ட CAA எதிர்ப்பு கூட்டத்தில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷமிட்ட மாணவிக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று AIMIM கட்சி சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் AIMIM கட்சி தலைவர் ஒவைசி பங்கேற்றார்.அப்போது மேடையில் பேசுவதற்காக வந்த மாணவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியும், ட்ரம்ப்பும் ஒரு தாய் பிள்ளைகள் – சீமான் விமர்சனம் …!!

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் வருகை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  இந்தியா வர இருக்கிறார். வருகின்ற பிப்ரவரி 24 , 25 இல் இரண்டு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்தார் ஒபாமா. அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய மோடேரா […]

Categories
உலக செய்திகள்

இந்தியா நெருக்கடி கொடுக்கிறது – ட்ரம்ப் பரபரப்பு புகார் …!!

இந்தியா – அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுப்பதாக அதிபர் ட்ரம்ப் புகார் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  இந்தியா வர இருக்கிறார். வருகின்ற பிப்ரவரி 24 , 25 இல் இரண்டு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்தார் ஒபாமா. அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய மோடேரா கிரிக்கெட் மைதானத்தை […]

Categories
தேசிய செய்திகள்

அங்கு செஞ்ச மாறி இங்கு செய்ய மாட்டோம் – அமித்ஷா உறுதி…!!

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியது போல வடகிழக்கு மாநில சிறப்பு சட்டமும் நீக்கப்படுஎன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக உள் துறை அமைச்சர் அமித் ஷா  தெரிவித்துள்ளார். இன்று அருணாச்சலப் பிரதேசம் உருவான நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறும் போது வடகிழக்கு மாநில பகுதிகளில்  உண்மையான வளர்ச்சி நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் தான் நடந்துள்ளது. இங்கு சட்டப்பிரிவு 371 விதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.100,00,00,000 செலவு…..”வெறும் 3 மணி நேர செலவு”….. மோடி – டிரம்ப் சந்திப்பு…!!

பிரதமர் மோடி – அமெரிக்கா அதிபர் டிரம்ப் சந்திப்புக்காக 3 மணி நேரத்துக்காக ரூ 100 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  இந்தியா வர இருக்கிறார். வருகின்ற பிப்ரவரி 24 , 25 இல் இரண்டு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்தார் ஒபாமா. அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

பாதிக்கப்படப்போவது விவசாயிகள் தான் – ப.சிதம்பரம் ….!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ,உறுதியான பாசன வசதி இல்லாத நிலங்களில் விவசாயம் செய்பவர்களுக்கு பயிர் இன்சூரன்ஸ் திட்டமே பாதுகாப்பு என்று உணர்ந்து அத்திட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது அத்திட்டத்தை பாஜக அரசு நீர்த்துப் போகச் செய்து, இப்பொழுது முற்றிலும் குலைக்க முடிவெடுத்திருக்கிறது. இன்சூரன்ஸ் பிரிமியத்தில் மத்திய அரசின் பங்களிப்பு இனி குறைக்கப்படுகிறது வங்கிக் கடன் பெறும் விவசாயிகளுக்கு இனி பயிர் இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயமில்லை இந்த மாற்றங்களின் விளைவுகள் மிக மோசமாக […]

Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலை – அரசின் தீர்மானம் பூஜ்யம் தான் ” மத்திய அரசு வாதம் …!!

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் பூஜ்யம் தான் என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் சட்டவிரோதமான காவலில் வைத்துள்ளதாக நளினி தொடர்ந்த ஆள்கொணர்வு வழக்கு இன்று விசரணைக்கு வந்தது. அதில் , அமைச்சரவை ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும். ஆளுநர் தன்னிச்சயாக செயல்பட முடியாது.  தமிழக அரசை ஆளுநர் நடத்துகின்றாரா அல்லது மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

பலநாள் அடைத்து வைத்து விதவை பெண் பலாத்காரம்… பாஜக எம்.எல்.ஏ மற்றும் குடும்பத்தினர் 6 பேர் மீது வழக்குப் பதிவு..!

உ.பியில் பாலியல் பலாத்காரம் செய்ததாக விதவை பெண் அளித்த புகாரில் பா.ஜ.க எம்.எல்.ஏ, அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த விதவை பெண் ஒருவரும், பதோகி தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் (Ravindranath Tripathi) உறவினர் சந்தீப் (sandeep) என்பவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பேசிபழகி வந்துள்ளனர். அதை தொடர்ந்து சந்தீப் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அந்த […]

Categories

Tech |