Categories
அரசியல் தேசிய செய்திகள்

சந்திராயன்-2 வை கைவிடமாட்டோம்…. மோடிஜியின் 100 நாள் சாதனை பேட்டியில் நிர்மலா சீதாராமன் உறுதி..!!

மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற 100 நாட்கள் சாதனைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். 370வது சட்டபிரிவு நீக்கம்: தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி 370 பிரிவை ரத்து செய்தது பாஜக அரசு. 370-வது சட்டப்பிரிவை நீக்கயதன் மூலம் காஷ்மீரில் தொழில் முதலீடுகள் பெருகும் என்றும், இதன்மூலம் தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 77 வது இடத்துக்கு முன்னேறி இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்: […]

Categories
தேசிய செய்திகள்

சுரங்ககளுக்கான ஒப்பந்தத்தில் முறைகேடு…. மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றசாட்டு..!!

இரும்புத்தாது மற்றும் பிற கனிம வளங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்களுக்கான  மறு ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறுவதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இரும்பு  தாது உள்ளிட்ட  கனிம வளங்களை வெட்டி  எடுக்கும் 358 சுரங்கங்கள் ஒப்பந்தங்களை 50 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து இருப்பதாக காங்கிரஸ் செய்தி  தொடர்பாளர் பவன் தெரிவித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அவசர சட்டம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட திருத்தம் மூலம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாமல்  ஏலமும் நடத்தப்படாமல் சுரங்கங்களில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

3,325 சீக்கியர்கள் படுகொலை… விசாரணைக்கு அனுமதி… காங்கிரஸை வச்சு செய்யும் பிஜேபி…!!

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் மீது மீண்டும் விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து 1954 ஆம் ஆண்டு டெல்லி மற்றும் பஞ்சாப்பில் காங்கிரஸ் அபிமானிகள் நடத்திய  கலவரத்தில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போது கமல்நாத் நிகழ்வு இடத்தில் இருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. அத்துடன் குற்றவாளிகள்  5 பேருக்கு தனது வீட்டில் அடைக்கலம் அளித்தார் என்ற மற்றொரு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

1 ஆண்டாக கல்லூரிக்குள் வைத்து பலாத்காரம்…. சிக்கிய பாஜக பிரபலம்…. ஆதாரங்களை வெளியிட தயார்… மாணவி பகிர் பேட்டி…!!

உத்திரப்பிரதேசத்தில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தா மீது பாலியல் புகார் கூறியுள்ள சட்டக்கல்லூரி மாணவி அதற்கான ஆதாரத்தை ஒப்படைக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் சட்ட கல்லூரி  மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக நேற்று டெல்லியில் பாதிக்கப்பட்ட மாணவி பத்திரிகையாளர்களை சந்தித்து உள்ளார். ஓராண்டாக சுவாமி சின்மயானந்தா கல்லூரிக்குள் வைத்து மாணவியை பலாத்காரம் செய்து வந்தார் என்று கூறிய மாணவி, அவர் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரங்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடியின் 100 நாள் சாதனை…. பட்டியலிட்டு விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்…!!

பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நடுவே மத்திய அரசின் 100 நாள் ஆட்சி நிறைவுக் கொண்டாட்டங்கள் அவசியமா என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதற்கான  கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% சரிந்து விட்ட நிலையில் கொண்டாட்டங்கள் அவசியமா என்று காங்கிரஸ் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொருளாதார மந்த […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாதிகள் ஊடுருவல்….. தக்க பதிலடி கொடுத்த இராணுவம்….!!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை தாக்குதல் நடத்தி இந்திய இராணுவம் முறியடித்துள்ளது. காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. இந்திய இராணுவம் மற்றும் உளவு துறையும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அந்நாட்டு ராணுவத்தால் துப்பாக்கி சுடுதல், வெடிகுண்டுகள் வேட்டையாடுதல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டு இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஊடுருவ முயற்சி […]

Categories
தேசிய செய்திகள்

மொத அங்க போங்க…. அப்பறம் இங்க வாங்க…. மத்திய பாதுகாப்பு பணிக்கு செக்…!!

பாதுகாப்பு படைக்கு பணியில் சேர விரும்புவோர் கட்டாயம் 2 ஆண்டுகள் தேசிய பேரிடர் மீட்பு படையினரோடு பணி செய்திருக்க வேண்டுமென்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மழை , வெள்ளம், நிலச்சரிவு ஆகிய பணிகளை மேற்கொண்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப்படையினரின் மீட்புப்பணி அளப்பரியது. தமிழ்நாட்டில்  சென்னை பெரு வெள்ளம் கேரளா , வில் பெருவெள்ளம் , ஒரிசா உள்ளிட்ட பகுதிகளில் புயல் போன்ற சமயங்களில் இத்தகைய வீரர்களின் தங்களது பணியை செய்தமைக்காக உலகம் முழுமைக்கும் மக்களின் பாராட்டை […]

Categories
தேசிய செய்திகள்

படகுகளில் தீவிரவாதிகள்….. ஊடுருவி தென்னிந்தியாவில் தாக்குதல்…. எஸ்.கே ஷைனி எச்சரிக்கை ..!!

தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக ராணுவ கமாண்டர் எஸ்.கே ஷைனி எச்சரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. அந்த வகையில் தான் கடல் மூலமாக தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி செய்து தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக ஊடுருவி தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம்  என்று இந்திய உளவுத்துறை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

100 நாட்கள் ஆகிட்டு… வளர்ச்சி இல்லை… அடக்குமுறை…. சூறையாடல்….ராகுல் ட்வீட்…!!

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகியும் எந்த வளர்ச்சியும் ஏற்பட்டவில்லை என்று ராகுல் காந்தி ட்வீட் செய் துள்ளார். நடந்து முடிந்த மக்களை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து 2_வது  முறையாக பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகின்றது. புதிதாக தேர்வாகிய மோடி அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அதை பாகவினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகியும் மோடி அரசு […]

Categories
உலக செய்திகள்

சிக்கலில் இந்தியா ”ஜம்முவில் தேர்தல் நடத்துங்க” அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா….!!

இந்தியா ஜம்மு-காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் காஷ்மீர் பகுதி அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் இருப்பதும், அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு மற்றும் இணைய சேவை துண்டிப்பு தற்போது வரை இருப்பதை கேள்விப்பட்டு  நாங்கள் கவலை அடைகின்றோம்.மனித உரிமைகளை மதித்து , அங்கு துண்டிக்கப்பட்ட இணையம் மற்றும் மொபைல் சேவைகளை முழுமையாக வழங்க இந்திய […]

Categories
மாநில செய்திகள்

”நட்சத்திர வழக்குகளில் முத்திரை பதிக்கும் வாதங்களை முழங்கியவர் ஜெத்மலானி” முக ஸ்டாலின் இரங்கல்.!!

நட்சத்திர வழக்குகளில் முத்திரை பதிக்கும் வாதங்களை முழங்கியவர் ராம் ஜெத்மலானி என்று முக ஸ்டாலின் புகழ்ந்து கூறியுள்ளார்.  ராம்ஜெத்மலானி (95 வயது) பாகிஸ்தானில் சிந்து பகுதியில் பிறந்து சொந்த ஊரில் வழக்கறிஞராக பணியாற்றியவர். இவர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் மும்பைக்கு வந்து வழக்கறிஞர் பணி புரிந்து வந்தார். 1996 -ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார். இவர் இந்திரா காந்தி , ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாடியுள்ளார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை.!!

தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார்  தமிழகத்தின்  பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை சௌந்தரராஜனை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  தெலங்கானா ஆளுநராக  நியமனம் செய்தார். இதையடுத்து  தமிழிசை சௌந்தரராஜன் வருகின்ற செப்.08 ம்  தேதி ஆளுநராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணியளவில் ஹைதராபாத் ராஜ்பவனில்  உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநராக பொறுப்பேற்றார்.  இவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திரா எஸ். சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற தமிழிசைக்கு தெலங்கானா […]

Categories
தேசிய செய்திகள்

”ஊடுருவும் 200 பயங்கரவாதிகள்” அஜித் தோவால் எச்சரிக்கை…..!!

200க்கும் அதிகமான பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி செய்கின்றனர் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-வை நீக்கி மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து காஷ்மீரில் அசாம்பாவித சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் ஜம்மு முழுவதும்  குவிக்கப்பட்டுள்ளனர்.அங்கு பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு , செல்போன், இணையதள சேவை இரத்து செய்து அரசியல் கட்சி  […]

Categories
தேசிய செய்திகள்

“தேசம் ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞரை இழந்துவிட்டது” குடியரசு தலைவர் இரங்கல்..!!

 ஸ்ரீ ராம் ஜெத்மலானி காலமானது வருத்தமளிக்கிறது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.   ராம்ஜெத்மலானி (95 வயது) பாகிஸ்தானில் சிந்து பகுதியில் பிறந்து சொந்த ஊரில் வழக்கறிஞராக பணியாற்றியவர். இவர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் மும்பைக்கு வந்து வழக்கறிஞர் பணி புரிந்து வந்தார். 1996 -ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார். இவர் இந்திரா காந்தி , ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாடியுள்ளார். மேலும் இவர் 2 ஜி , […]

Categories
தேசிய செய்திகள்

ராம்ஜெத்மலானி உடலுக்கு அமித்ஷா , வெங்கையா நேரில் அஞ்சலி….!!

மறைந்த மூத்த வழக்கறிஞ்சர் ராம்ஜெத்மலானி உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர், துணை குடியரசுத் தலைவர் அஞ்சலி செலுத்தினர். மூத்த வழக்கறிஞரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். 95வயதான இவர் 1996 வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார். மறைந்த ராம் ஜெத்மலானி உடலுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேரில் அஞ்சலி அஞ்சலி செலுத்தினர்.

Categories
தேசிய செய்திகள்

“தமிழ் மகளாக பதவியை ஏற்கப்போகிறேன்” தமிழிசை பேட்டி.!!

தமிழ் மகளாக தெலங்கானா ஆளுநர் பதவியை ஏற்கப் போகிறேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.    தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக  நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து  தமிழிசை சௌந்தரராஜன் வருகின்ற செப்.08 ம்  தேதி ஆளுநராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில்  உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநராக பொறுப்பேற்பதற்காக  தமிழிசை வந்துள்ளார். அவரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி காலமானார்…..!!

மூத்த வழக்கறிஞரும் , முன்னாள் அமைச்சருமான ராம்ஜெத்மலானி காலமானார். மூத்த வழக்கறிஞரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார்.  95வயதான அவர்  பாகிஸ்தானில் சிந்து பகுதியில் பிறந்த இவர்  சொந்த ஊரில் வழக்கறிஞராக பணியாற்றினார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் மும்பைக்கு வந்து வழக்கறிஞர் பணி புரிந்து வந்தார். 1996 வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார். இந்திரா , ராஜீவ் படுகொலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று  தெலங்கானா ஆளுநராக பதவியேற்கிறார் தமிழிசை..!!  

தமிழிசை சௌந்தரராஜன் இன்று  தெலங்கானா ஆளுநராக பதவியேற்கிறார்  கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வந்தவர்  தமிழிசை சௌந்தரராஜன். இவரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  தெலங்கானா ஆளுநராக  நியமனம் செய்தார். இதையடுத்து  தமிழிசை சௌந்தரராஜன் வருகின்ற செப்.08 ம்  தேதி ஆளுநராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில்  உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார். இவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ். சவுகான் பதவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக வேண்டாம்…. இணையும் திமுக , அதிமுக….. போருக்கு தயாராகும் ரஜினி…!!

ரஜினி_யின் அரசியல் கட்சி 2021 சட்டமன்ற தேர்தலுக்கு விரைவாக தயாராகி வருவதாக முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். நான் அரசியலுக்கு வருவேன். போருக்கு தயாராக இருங்கள் என்று அடுக்கடுக்கான வசனங்களுடன் அரசியல் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து  நீண்ட நாட்கள் ஆன நிலையில் 2021-ஆம் ஆண்டு வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் புதிய கட்சி போட்டியிடுட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள ரஜினி மன்ற நிர்வாகிகள் ரஜினியின் உத்தரவின் பேரில் பூத் கமிட்டி அமைக்கும் […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநராக தமிழிசை பதவியேற்கும் நிகழ்ச்சி…. துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்பு.!!

தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கிறார்.  கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வந்தவர் தமிழிசை சௌந்தரராஜன்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரின் மகளான தமிழிசை கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெலுங்கானா உட்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநரை நியமனம் செய்து உத்தரவிட்டார். இதில் தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்திய தளபதி ஸ்டாலின்” புகழாரம் சூட்டிய பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன்..!!

கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார் என்று பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.  திமுகவும், பாஜகவும் ஒருவருக்கொருவர் மாறி மாறி  கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்   திருப்பூரில் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் பேசியதாவது, கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார். மு.க.ஸ்டாலினின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தியுள்ளது என்று பெருமையுடன் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்…!!

ஐ.என்.எக்ஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் கேட்ட அனைத்து ஆவணங்களையும்  அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று அவருக்கு முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் நேற்றைய  விசாரணையில் ப.சிதம்பரம் தரப்பு ,  அமலாக்கத்துறை  தரப்பு வாதங்கள் முழுமையாக முடிவடைந்தது. வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம். அமலாக்கத்துறை சார்பில் ப.சிதம்பரத்திடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டது , எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டது ,எத்தனை முறை ஆஜரானார் உள்ளிட்ட விவரங்களை சீலிடப்பட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

8 நாடுகள்….. பாஜக உறுப்பினர் …. பெருமை கொள்ளும் பிஜேபி …!!

பா.ஜ.க_வின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட பெரிய மக்கள் தொகை கொண்ட 8 நாடுகளே உள்ளன என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். தலைநகர் புதுடெல்லியில் உள்ள பா.ஜ.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயல்தலைவர் ஜே.பி. நட்டா செய்தியாளர்களை சந்தித்தார். கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தல் இந்த வருடம்  டிசம்பரில் நடைபெறும் என்று கூறிய ஜே.பி. நட்டா கட்சியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 18 கோடியாக உள்ளது.நாடு முழுவதும்   பா.ஜ.க கட்சிக்கு அதிக அளவில் ஆதரவு இருந்தது வருகின்றது. தொடர்ந்து எங்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

புதிதாக 7,00,00,000….. மொத்தமாக 18,00,00,000…. ஜே பி நட்டா பெருமிதம்…!!

பாஜகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 கோடியாக அதிகரித்துள்ளது என்று பாஜகவின் செயல் தலைவர் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க_வின் செயல் தலைவர் ஜே பி நட்டா கூறும் போது , கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி முதல் நாடு முழுவதும் பாஜகவின் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் நடைபெற்றது.இதுவரை நடைபெற்ற உறுப்பினர் பதிவில் புதிதாக 7 கோடி பேர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். மேலும்  அவர் பேசுகையில் , இதனால் பா.ஜ.க கட்சியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ”செப்.4 வரை சிதம்பரத்தை கைது செய்ய தடை” உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

ப.சிதம்பரத்தை  செப்.4 வரை கைது செய்ய தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று அவருக்கு முன்ஜாமீன் கேட்டு  உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா வாதங்களை முன் வைத்தார்.அதில் , சிதம்பரம் மழுப்பலான பதில்களையே அளிக்கிறார்.  வழக்கின் உண்மை தகவலை மறைத்து வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். இவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் வங்கி பணத்தை மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி […]

Categories
தேசிய செய்திகள்

இவரை விட்டுறாதீங்க…. திருடர்கள் தப்பி விடுவார்கள்…. கேவலப்படுத்திய அமலாக்கத்துறை…!!

ஐ.என்.எக்ஸ் வழக்கில் முன்ஜாமீன் கோரிய  ப.சிதம்பரத்தை வங்கி பண மோசடிகள் மலையா , நீரவ் மோடியுடன் ஒப்பீட்டு அமலாக்கத்துறையினர் வாதங்களை முன்வைத்தனர்.  ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று அவருக்கு முன்ஜாமீன் கேட்டு  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையில் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞ்சர்கள் கபில் சிபில் , அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் தங்கள் வாதங்களை முன்வைத்து முடித்த நிலையில் நேற்றும் இன்றும்  அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்ட்டு […]

Categories
தேசிய செய்திகள்

”வழக்கில் தப்பிக்கவே ப.சிதம்பரம் முயற்சி” அமலாக்கத்துறை வாதம்…!!

ஐ.என்.எக்ஸ் வழக்கில் தப்பிக்கவே ப.சிதம்பரம் முயற்சி செய்கின்றார் என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதங்களை முன்வைக்கப்படுகின்றது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று அவருக்கு முன்ஜாமீன் கேட்டு  உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா வாதங்களை முன் வைத்தார்.அதில் , சிதம்பரம் மழுப்பலான பதில்களையே அளிக்கிறார்.  வழக்கின் உண்மை தகவலை மறைத்து வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார் என்ற குற்றச்சாட்டை  முன்வைத்தார். ப.சிதம்பரத்துக்கு நாளை வரை சிபிஐ காவலில் வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

மோடிஜியின்”FITNESS CHALLANGE” தொடங்கியது புதிய இயக்கம்… இனி ஆட்டம் ஓட்டம் தான்..!!

டெல்லியில் இந்திய மக்கள் FITNESS ஆக இருக்கவேண்டுமென இந்திய உடற்தகுதி இயக்கம் ஒன்றை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். ஆகஸ்ட் 29 ஆம் தேதியான இன்று இந்திய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவில் இவ்வாண்டு வெகு விமர்சையாக இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய மக்கள் FITNESS உடன் இருக்க வேண்டும் என்பதற்காக இதற்கு முன் FITNESS CHALLANGE ஒன்றை பிரதமர் மோடி மேற்கொண்டு அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடகா அரசுக்கு சிக்கல்….. 10 MLA_க்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி… முதல்வர் எச்சரிக்கை…!!

கர்நாடகா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். பின்னர் 18 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்னும் 16 அமைச்சர்கள் இடம் காலியாக உள்ளன. அமைச்சர் பதவி கிடைக்கும் என்று ஆசையில் இருந்த பாஜக_வினர் பலர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

”ஸ்ரீநகர் புறப்பட்டார் சீதாராம் யெச்சூரி” MLA யூசுப் தரிகாமி_யை சந்திக்கிறார்..!!

உச்சநீதிமன்ற அனுமதியையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகருக்கு புறப்பட்டார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேஷமாக மத்திய அரசு அறிவித்ததில் இருந்து  அங்கு பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகின்றது. அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்முவிற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வர கூடாது என்று மாநில ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே கடந்த 9_ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘பாகிஸ்தானுக்கு உதவிய ராகுல்” மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்…. மத்திய அமைச்சர் ஆவேசம்..!!

ராகுல் காந்தி பாகிஸ்தானுக்கு உதவியுள்ளார் எனவே அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மத்திய அமைச்சர் கண்டித்துள்ளார். ஜம்முக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராகுல் கொடூரமான அரசு நிர்வாகத்தின் பிடியில் எதிர்க்கட்சியும், இந்திய ஊடகங்களும் சிக்கியுள்ளது. அரசின் அடக்குமுறையால் மக்கள் ஒடுக்கப்பட்டு காஷ்மீர் கலவரத்தில் கொல்லப்படுகிறார்கள் என்று தெரிவித்தார். ராகுலின் இந்த கருத்தை குறிப்பிட்டு பாகிஸ்தான் ஐ.நா.விற்கு கடிதம் எழுதியது. இதனால் ராகுல் காந்தி கடும் விமர்சனத்துக்கு ஆளாக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவர் தனது டுவிட்டரில் பக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் மக்களுக்கு ஜாக்பாட்…. 2 மாதத்தில் அரசு பணி….. 50,000 வேலைவாய்ப்பு….!!

ஜம்முவில் 50,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து , ஜம்மு மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து அங்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவில் சேருங்கள்…. சொல்லிட்டு போங்க….. காங்கிரஸ் தலைவர் கருத்து..!!

காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் பாஜக செல்ல வேண்டுமென்றால் தாராளமாக செல்லுங்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், எம்.பி. சசிதரூர் பிரதமர் மோடியை பாராட்டினர். இதனால கடும் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி தலைமை இருவருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. இவர்கள் இருவரின் கருத்து பல்வேறு மட்டங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான  வீரப்ப மொய்லி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசும் போது , காங்கிரசிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

நாளை ஜம்மு-காஷ்மீர் செல்கின்றார் சீதாராம் யெச்சூரி ….!!

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நாளை ஜம்மு காஷ்மீர் செல்கின்றார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேஷமாக மத்திய அரசு அறிவித்ததில் இருந்து  அங்கு பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகின்றது. அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்முவிற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வர கூடாது என்று மாநில ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே கடந்த 9_ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

3_ஆவது முறையாக கைது நீட்டிப்பு…. நாளை மீண்டும் விசாரணை…!!

ப.சிதம்பரத்துக்கு 3-ஆவது முறையாக கைது தடை நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் டெல்லி நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கான முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று  நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு  நடைபெற்றது.கடந்த இரண்டு நாட்களாக சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்களாக அபிஷேக் மனு சிங்வி , கபில் சிபில் வாதங்களை முன்வைத்த நிலையில் மதியம் 2 மணியிலிருந்து அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்தார். அப்போது இந்த வழக்கு என்பது பழிவாங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

”அவர் அறிவாளி , சாதுரியம் மிக்கவர்” புகழ்ந்து அசிங்கப்படுத்திய அமலாக்கத்துறை…!!

ப.சிதம்பரம் அறிவாளி மற்றும் சாதுரியம் மிக்கவர் என்பதால் இது போன்ற சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட முடிந்தது என்று அமலாக்கத்துறை தெரிவித்தது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது. அதே போல அமலாக்கத்துறையினர் கைது செய்ய கூடாது என்ற முன்ஜாமீன் மனு மீதான விசாரணை  இன்று தொடங்கியது. நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததில் அமலாக்கத் துறை சார்பாக மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்த போது , சட்டவிரோத பண […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீர் எங்க பிரச்னை” தீடீர் பல்டி அடித்த ராகுல்….!!

காஷ்மீர் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை. இதில் பாகிஸ்தானோ அல்லது வேறுநாடுகளோ உடன்பட இடமில்லை என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து இன்னும் அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் ஜம்முவுக்கு செல்ல முயன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்….!!

காஷ்மீரில் ஊடகத்திற்கு அனுமதி வழங்காதது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து இன்னும் அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளன.  மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. அங்குள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அமித்ஷா விமானத்தை இயக்க பொய்யான மின்னஞ்சல்… விமானப்படை அதிகாரி கைது..!!

அமித்ஷா விமானத்தை இயக்க பொய்யான மின்னஞ்சல்களை அனுப்பி அனுமதி பெற்ற விமானப்படை முன்னாள் அதிகாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பொறியியல் துறையில் முன்னணி வகிக்கும் எல்என்டி நிறுவனத்துடன் அரசியல் தலைவர்கள் பயணிப்பதற்கான தனி விமானங்களை எல்லை பாதுகாப்பு படையின் விமானப் படைப் பிரிவு ஓட்டுவதற்கு சுமார் 1000 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு எல்என்டி நிறுவனங்களுக்கு எல்லை பாதுகாப்பு படையின் விமானப் படைப் பிரிவில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் வழக்கு – அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் 

ஜம்மு-காஷ்மீர் தொடர்பான அனைத்து வழக்குகளையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஜம்முவில் சிறப்பு சட்டப்பிரிவு 370_ஐ ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று தற்போது அறிவிப்பானது வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து தொடங்கப்படும் என்றும் தலைமை நீதிபதி அறிவித்திருக்கிறார்.இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் பொதுமக்களுக்கு அங்கு சரிவர எந்தவித […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : காஷ்மீர் செல்லலாம் ”சீத்தாராம் யெச்சுரிக்கு” உச்ச நீதிமன்றம் அனுமதி..!!

ஜம்மு காஷ்மீர் செல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீத்தாராம் யெச்சுரி-க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததுள்ளது. ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து இன்னும் அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் ஜம்முவுக்கு செல்ல முயன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். அதே […]

Categories
மாநில செய்திகள்

துப்பாக்கிச்சூடு சம்பவம்: 300 விசாரித்தோம்…. 365 விசாரிக்கனும்…தமிழக அரசு பதில்…!!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இன்னும் 300 சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018_ஆம் ஆண்டு மே 22_ஆம் தேதி அங்குள்ள பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கான  மக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தியது கலவரமாக மாறி போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.தமிழக அரசின் உத்தரவை இரத்து செய்து […]

Categories
தேசிய செய்திகள்

கிருஷ்ணர் ”புல்லாங்குழல் ஊதினால் பால் உற்பத்தி அதிகரிக்கும்” பாஜக MLA பேச்சு…!!

கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதும் போது பசுக்களின் பால் உற்பத்தி உயரும் என்று  பாஜக எம்.எல்.ஏ. திலிப் குமார் பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தின்பால் அங்கு நடைபெற்ற  நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய போது , கடவுள் கிருஷ்ணர் ஆடிக்கொண்டு இருக்கும் போது புல்லாங்குழல் ஊதுவார். அப்போது அவர் ஊதியதை கேட்டால் பசுக்களின் பால் உற்பத்தி உயரும் என்றும் , இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது, என்று கூறியுள்ளார்.இவரின் இந்த கருத்து அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள்  தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பாஜகவினர் இது […]

Categories
தேசிய செய்திகள்

”பாஜக மீது தீய சக்தி ஏவினார்கள்” காங்கிரஸ் கண்டனம்…!!

பாஜக மீது எதிர் கட்சிகள் தீய சக்தியை ஏவி விட்டுள்ளதாக போபால் MP கூறியதற்கு காங்கிரஸ் கட்சியின் ஜோதிராதித்ய சிந்தியா விமர்சனம் செய்துள்ளார். கடந்த ஒரு ஆண்டில் பாஜகவின் முக்கிய , மூத்த தலைவர்கள் மரணமடைந்துள்ளனர்.  குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் , மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர் , சுஷ்மா ஸ்வராஜ் , அருண் ஜெட்லி ஆகிய முக்கிய தலைவர்கள் இறந்துள்ளனர்.பாஜகவின் அடுத்தடுத்து மரணங்கள் குறித்து  போபால் பாஜக எம்பி பிரக்யாசிங் தாகூர் கூறியது சர்சையை ஏற்படுத்தியது. அதில்,  பாஜகவின் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட் மைதானம் ”அருண் ஜெட்லி” பெயருக்கு மாற்றம்…!!

டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் ‘அருண் ஜெட்லி’ மைதானம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 9-ம்  தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24-ஆம் தேதி காலமானார். பின்னர் அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து 25_ஆம் தேதி இறுதி ஊர்வலமாக டெல்லியில் உள்ள நிகாம் போத்  மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வெளிநாட்டு பயணத்தில் இருந்த பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

”உண்மை ஒருநாள் வெல்லும்” ப.சிதம்பரம் குடும்பத்தினர் அறிக்கை…!!

ப.சிதம்பரம் குறித்து பரப்பப்படும் தகவல்கள் பொய்யானவை உண்மை ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவரின் குடும்பத்தினர் அறிக்கை விடுத்துள்ளனர். ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது. அதே போல அமலாக்கத்துறையினர் வழக்கு நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. நாடு முழுவதும் ப.சிதம்பரம் வழக்கு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அவரின் குடும்பத்தை மிகுந்த சோகத்தில் தள்ளியுள்ளது. இந்நிலையில் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் , […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் ”கைது தடை மேலும் நீட்டிப்பு” நாளை மீண்டும் விசாரணை…. உச்சநீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா அமலாக்கத்துறை வழக்கு விசாரணை நாளை நடைபெறுமென்று  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்யக்கூடாது என்று முன்ஜாமீன் கேட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ப.சிதம்பரம் சார்பாக கபில் சிபில் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர்  வடித்தாடுகின்றனர். ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்தது இன்று 12 மணியோடு நிறைவடைகின்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற  விசாரணையில் கபில் சிபில் , அபிஷேக் மனு சிங்வி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. எங்களின் தரப்பு வாதங்களை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பொருளதார பேரழிவு…. பிரதமருக்கு தெரில…. பணத்தை திருடாதீங்க…. ராகுல் கடும் விமர்சனம்…!!

பொருளாதார சீரழிவை போக்க இந்திய ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடுவது பயனற்றது என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது. இதற்க்கு சிறந்த உதாரணமாக ஆட்டோ மொபைல் வீழ்ச்சியை பார்க்க முடியும்.இதுவரை இல்லாத அளவு கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக பல்வேறு பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீத்தாராமன் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சீராக இருப்பதாக தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.அதன் ஒரு பகுதியாக […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசுக்கு ”ரூ 1,76,000,00,00,000” கொடுக்கும் ரிசர்வ் வங்கி …!!

மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி கடன் கொடுப்பதாக  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆட்டோ மொபைல் துறை கடும் வீழ்ச்சி அடைந்து இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தன.மேலும் பல்வேறு தொழில்கள் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் பல்வேறு விமர்சனம் எழுந்தது. இதையடுத்து கடந்த 23_ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் , அமெரிக்க, சீன வர்த்தக யுத்தத்தால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமான சூழல் நிலவுகிறது. இந்தியா போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஐ.என்.எக்ஸ் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது….!!

ப.சிதம்பரத்தின் ஐ.என்.எக்ஸ் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்யக்கூடாது என்று முன்ஜாமீன் கேட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ப.சிதம்பரம் சார்பாக கபில் சிபில் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர்  வடித்தாடுகின்றனர். ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்தது இன்று 12 மணியோடு நிறைவடைகின்றது. இந்தநிலையில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் கேட்டு ஒருபக்கம் வாதம் நடந்தாலும் இன்னொரு பக்கம் சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் குழு சிபிஐ சிதம்பரத்தை கைது செய்தது சட்டத்துக்கு […]

Categories

Tech |