Categories
தேசிய செய்திகள்

எல்லாமே அமித்ஷா தான்…. ”ஆட்சியை கவிழ்த்தோம்”…. எடியூரப்பா_வின் சர்சை ஆடியோ

கர்நாடகா அரசியலில் குமாரசாமி அரசு கவிழ்ப்பதற்கு நடைபெற்ற அனைத்தும் அமித்ஷா_வுக்கு தெரிந்தே நடந்ததாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில் அமித்ஷா மேற்பார்வையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப் பட்டதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா  கூறிய ஆடியோ ஓன்று வெளியாகி கர்நாடக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா அரசுக்கு எதிராக அந்த கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களை போர்க்கொடி தூக்கியதால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இந்நிலையில் பாஜக […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு…..!!

உத்தரப் பிரதேசத்தில் 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிலிப்பிட் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் தங்களது விவசாய கழிவுப் பொருட்களை தெருக்களில் வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக தேசிய பசுமைத் தீர்பாயத்தின் உத்தரவின் பேரில், அப்பகுதியைச் சேர்ந்த வருவாய் அலுவலர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து சுமார் 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவசாயிகள் பில்சந்தா, நேரியா, அமரியா, புரன்பூர், சேரமாவூ, மதோடண்டா, ஜகனபாத், பிசால்பூர் மற்றும் கஜ்ராவூலா கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.விவசாயிகள் […]

Categories
தேசிய செய்திகள்

தாய்லாந்து மொழியில் திருக்குறள் வெளியிடவுள்ள நரேந்திர மோடி…..!!

தாய்லாந்து வாழ் இந்தியர்களிடையே உரையாற்றவுள்ள நரேந்திர மோடி, தாய்லாந்து மொழியில் திருக்குறள் நூலை வெளியிடவுள்ளார். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக தாய்லாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார். அங்கு நடக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பிலும் பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டணியின் மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். தாய்லாந்து வாழ் இந்தியர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் சீக்கிய மதகுரு குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாணயம் வெளியிடவுள்ளார். திருக்குறளை தாய்லாந்து மக்களின் பிரதான மொழியான ‘தாய்’ மொழியில் வெளியிட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

லால்பகதூர் சாஸ்திரி சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை ….!!

மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்ண்ட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாடு நேற்று தொடங்கியது. இருநாள்கள் நடக்கும் மாநாடு இன்று நிறைவடைகிறது. இந்தியா சார்பில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுக்கிடையே பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. இதுமட்டுமின்றி அமைப்பில் உள்ள மற்ற நாடுகளுடன் உறவை வலுப்படுத்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

குடியரசுத் தலைவர் உங்கள் பாக்கெட்டிலா? – பாஜகவை கலாய்க்கும் சிவசேனா

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்கப்படும் என பாஜக மூத்தத் தலைவர் தெரிவித்ததற்கு, அவர் என்ன உங்கள் பாக்கெட்டில் உள்ளாரா என சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 105 இடங்களில் வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையான 145 இடங்கள் அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. இதனைத் தனக்குச் சாதகமாகப் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய பாகிஸ்தானியர்கள்….!!

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானியர்கள் அந்நாட்டு முக்கிய நகரங்களில் பேரணி நடத்தினர். காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்ததன் மூலம் நீக்கியது. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றன. போக்குவரத்து, வர்த்தகம் ஆகியவற்றை பாகிஸ்தான் முடக்கிக்கொண்டது. இந்நிலையில் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் நீடிக்கும் அரசியல் சிக்கல்: ஆளுநரை சந்தித்தார் ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்துவரும் பரபரப்பான சூழலில், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்துப் பேசியுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 162 இடங்களை கைப்பற்றியுள்ளது. 104 இடங்களில் வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பாஜக-வுக்குக் கிடைக்கவில்லை. இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிவசேனா, வெறும் […]

Categories
தேசிய செய்திகள்

மோடியின் விமானத்திற்கு அனுமதி தர மறுத்த பாகிஸ்தான்….!!

சவுதி அரபியாவிற்கு அரசுமுறை பயணமாக செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் தங்கள் நாட்டு வான்வழியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க பாகிஸ்தான் மறுத்துள்ளது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்ததன் மூலம் நீக்கியது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனிடையே, இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றன. […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி …!!

ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீரில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார். தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. பிரதமர் மோடி வழக்கம்போல் இம்முறையும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்திற்குச் சென்ற பிரதமர் மோடி ராணுவ வீரர்களைச் சந்தித்து தன் வாழ்த்துகளை தெரிவித்தார். நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். பாகிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 1947ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று இந்திய ராணுவம் காஷ்மீருக்குச் […]

Categories
அரசியல்

தமிழிசையை தொடர்ந்து…… மற்றொரு பாஜக தலைவர்…… மிசோரின் ஆளுநராக நியமனம்….!!

மிசோரின் ஆளுநராக கேரள மாநிலத்தின் பாஜக தலைவர் பி.எஸ்.பி.ஸ்ரீதரன் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.  டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்று வெளியானது. அதில் கேரள மாநிலத்தின் பாஜக தலைவரான பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை மிசோரின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. மேலும் லடாக்கின் துணை ஆளுநராக ராதாகிருஷ்ணன் மாத்தூர் என்பவரும், ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக  கிரிஷ் சந்திர என்பவரும், கோவாவின் ஆளுநராக ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யகோபால் என்பவரும் நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே தமிழக பாஜக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மராட்டிய மண்ணில் அமைச்சராகும் தமிழர் கேப்டன் தமிழ்ச்செல்வன்?

மகராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் வெற்றிபெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மகத்தான வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதில் பாஜக 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், மும்பையின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான சியோன் கோலிவாடாவில் பாஜக சார்பில் போட்டியிட்ட கேப்டன் தமிழ்ச்செல்வன் இரண்டாவது முறையாக வெற்றி வாகைச் சூடியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பிலாவிடுதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்னாள் முதல்வர் மகன் வெற்றி……. “2 வது இடம்” பாஜக கூட்டணியை பின்னுக்கு தள்ளிய நோட்டா….!!

மஹாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் போட்டியிட்ட அதே தொகுதியில் அவரது இளைய மகன் வெற்றி பெற்ற நிலையில், பாஜக கூட்டணியை நோட்டா   பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் எஸ்சி எஸ்டி வாக்குகள்  அதிகம் உள்ள லத்தூர் தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் மரணமடைந்த நிலையில், அவரது இளைய மகன் தீரஷ் தேஷ்முக்  அதே தந்தை நின்ற அதே தொகுதியில் நின்று 67.63 வாக்கு சதவிகிதமும் மொத்தம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆட்சி அமைக்கும் சாவி….”10 மாதத்தில் 10 இடம்” கிங் மேக்கர் துஷன் சவுதாலா…!!

ஹரியானாவில் ஓராண்டு கூட நிறைவடையாத ஜனநாயக் ஜனதா கட்சி கிங் மேக்கராக உருவெடுக்கும் சூழல் நிலவுகிறது. 90 சட்டப்பேரவை கொண்ட ஹரியானாவில் தனிப்பெரும்பான்மை பெற 46 தொகுதிகள் கைப்பற்ற வேண்டும். ஆனால் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெற்றது. சாவி சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சி அமைப்பதற்கான சாவியையும்  கைப்பற்றியிருக்கும் ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஜனநாயக் ஜனதா கட்சியின் இளம் தலைவரான துஷன் சவுதாலா ஆட்சியை தீர்மானிப்பவராக இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா சட்டமன்ற இடைத்தேர்தல் : காங்கிரஸ்_ஸா ? கம்யூனிஸ்ட்_டா ?

கேரளாவில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று  முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் கேரளா மாநிலத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று அதற்கான முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் அறிவிக்கப்பட்ட்து. கேரளா சட்டமன்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே உத்தரவு.. ரூ 92,000,00,00,000 ..”ஏர்டெல், வோடபோனுக்கு ஆப்பு” உச்சநீதிமன்றம் அதிரடி …!!

ஏர்டெல் , வோடபோன்  நிறுவனம் மத்திய அரசுக்கு உரிய பணத்தை கொடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏர்டெல் , வோடபோன் போன்ற நிறுவனங்கள் தங்களின் வருவாயை குறைத்துக் காட்டுவதாக பல்வேறு தரப்பில் குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளையும் சமூக ஆர்வலர்கள் , வாடிக்கையாளர்கள் மற்றும் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. மேலும் மத்திய அரசு தொலைதொடர்பில் உள்ள  கொளகையை மாற்றம் செய்து புதிய தொலை தொடர்பு கொள்கையில், தொலைத்தொடர்பு நிறுவனர் தங்களின் வருகையின் ஒரு பகுதியை மத்திய […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”தமிழகத்துக்கு புதிய மருத்துவ கல்லூரி” மத்திய அரசுக்கு EPS நன்றி ….!!

தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூடுதல் மருத்துக்கல்லூரி தொடங்க மத்திய அரசிடம் தொடர்ந்து அனுமதி கேட்டு வந்த நிலையில் இன்று  தமிழகத்தில் 350 கோடி செலவில் புதிய மருத்துவ கல்லூரிகள் திருப்பூர் , நீலகிரி,  ராமநாதபுரம் , நாமக்கல் , திண்டுக்கல் , விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொடங்குவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஒவ்வொரு மருத்துவ கல்லூரியும் ரூ 325 கோடி ரூபாய் மதிப்பிலான அமைக்கப்படும் என்றும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லியில் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் வேலுமணி சந்திப்பு….!!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழ்நாடு அமைச்சர் வேலுமணி சந்தித்துப் பேசியுள்ளார். உள்ளாட்சித் துறை சிறப்பாக செயலாற்றியதற்காக மத்திய அரசு தமிழ்நாட்டை கவுரவிக்கும் விதத்தில் விருது வழங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தது. அவ்விருதைப் பெற தான் டெல்லி செல்லவுள்ளதாக நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்திருந்தார். இதன்படி, விருதினைப் பெற சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

BSNL-க்கு ஒரு வழியாக 4ஜி சேவைக்கு ஒப்புதல்….!!

நீண்ட இழுத்தடிப்புக்குப் பின் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஒரு வழியாக 4ஜி எனப்படும் நான்காம் தலைமுறை அலைக்கற்றை சேவை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவை வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கோரிக்கைகள் வைக்கப்பட்டுவந்தது. தனியார் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடோஃபோன் நிறுவனங்களின் 4ஜி சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதித்தபோதும் அரசு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இந்த அனுமதி வழங்கப்படாமலே இருந்துவந்தது. மேலும், பிஸ்என்எல் – எம்டிஎன்எல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி அரசியலுக்கு வந்தா மற்ற கட்சி அழிஞ்சுடும் – பொன்.ராதாகிருஷ்ணன் …!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மற்ற கட்சிகள் அழிந்து விடும் என்று  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த தமிழ் சினிமாவில் கோலோச்சி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே நேரம் அவர் புதிய அரசியல் கட்சி தொடங்கி அரசியலிலும் கோலோச்சுவேன் என்று அவர் கடந்த 2 வருடமாக சொல்லிக் கொண்டு இருக்கின்றார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ரஜினியின் கட்சி போட்டியிடும் என்றும் சொல்லப்படுகின்றது. இதற்காக அவர் தனது படப்பிடிப்புகளில் மிக விரைவாக பணியாற்றி வருவதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”தமிழகத்துக்கு 6 புதிய மருத்துவ கல்லூரி” மத்திய அரசு ஒப்புதல்…!!

தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் BSNL பொதுத்துறை நிறுவனத்துக்கு 4 G சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்டதை போல தமிழக சுகாதாரத்துறை_க்கு மத்திய அரசு சார்பில் ஒரு அறிக்கை அனுப்பப்பட்டது. அதில் தமிழகத்தில் 350 கோடி செலவில் புதிய மருத்துவ கல்லூரிகள் திருப்பூர் , நீலகிரி,  ராமநாதபுரம் , நாமக்கல் , திண்டுக்கல் , விருதுநகர் ஆகிய […]

Categories
அரசியல்

“கடவுள் குறித்து அவதூறு” இந்துக்கள் இந்த கடைல துணி வாங்காதீங்க…… சமூகவலைத்தளத்தில் வைரலாகும் H.ராஜா பேச்சு….!!

இந்துக் கடவுள் குறித்து அவதூறாகப் பேசியதன் காரணமாக, காரப்பன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியில்  ஜவுளி நிறுவன முதலாளியும், தேசிய கைத்தறி நெசவுப் பயிற்சியாளருமான காரப்பன் என்பவர், சில நாட்களுக்கு முன்பாக அந்த மாவட்டத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று இந்துக் கடவுள்கள் குறித்து அவதூறாக பேசிய சர்ச்சை வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக வைரலாகி வருகிறது. இதற்குப் பல்வேறு இந்துதுவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும்  சூழ்நிலையில், பாஜக தேசியச் […]

Categories
தேசிய செய்திகள்

அங்க விட்டுட்டாங்க…. நீங்களும் விடுங்க ….. ஐடியா_வுடன் ப.சிதம்பரம் ஜாமீன் மனு …!!

ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ஜாமீன் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நேற்றையதினம் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இருந்தாலும் தற்போது அவரால் வெளியே வரமுடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. ஏனென்றால் இதே வழக்கில் அமலாக்கத்துறை அவரை கடந்த வாரம் திகார் சிறையில் நேரடியாகச் சென்று கைது செய்தது. இதையடுத்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேசக் குழு உறுப்பினர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு…!!

ஜே.பி. மோர்கன் சர்வதேசக் குழுவின் உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஜே.பி. மோர்கன் சர்வதேசக் குழுவின் உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சபையின் உறுப்பினர்களாக இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அமெரிக்காவின் அமைச்சர்கள் கான்டோல்லீசா ரிச், ஹென்றி கிஸ்ஸிங்கர், ரத்தன் டாடா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ‘ஜே.பி. மோர்கன் சர்வதேச சபைக் கூட்டத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு_க்கு ஆதரவு…. ”இப்போ இப்படி பண்ணுறீங்க” ஷா_விடம் சரணடைந்த ஜெகன் …!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பிறந்தநாளான இன்று, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவரை நேரில் சந்தித்து ஆந்திர மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் சந்திப்பு இன்று டெல்லியில் நடைபெற்றது. 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஆந்திர மாநிலம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகள் பற்றி ஆலோசிக்கப் பட்டுள்ளது. அதில், ஆந்திர மாநிலம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சி தொடங்குனா என்ன ? பாஜகவில் சேர்ந்தா என்ன ? அசால்ட் கொடுத்த அழகிரி ….!!

நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்கினாலும் அல்லது பாஜகவில் இணைந்தாலும் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பயனும் ஏற்படப்போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்குநேரியில் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் அத்துமீறி நுழையவில்லை. தேர்தலில் நெருக்கடி ஏற்படும்பொழுது அரசு இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுகிறது. மக்களவை உறுப்பினரும் ஒரு கட்சியின் தலைவரும் எந்த ஒரு தவறான செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள். அரசு தனது […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாம் விதி ….. என்னத்த சொல்ல ….. ஜாமீன் கிடைச்சுருச்சு…. ஆனாலும் சிறை தான் …!!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தை பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோர் தொடங்கினர். இந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில், ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயரையும் சிபிஐ சேர்த்து வழக்கு பதிவு செய்தது.   […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்” உச்சநீதிமன்றம் அதிரடி ….!!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம் சிபிஐ கைது ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தை பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோர் தொடங்கினர். இந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில், ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் பெயரையும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பெயரையும் சிபிஐ சேர்த்தது. இந்த வழக்கில் முன்பிணை கோரி டெல்லி நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு தழுவிய வேலைநிறுத்தம்! வங்கி சேவைகள் முற்றிலுமாக முடங்கும் நிலை…!!!

மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, வங்கி ஊழியர்கள் இன்று (அக். 22) திட்டமிட்டபடி நாடு தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, வங்கி ஊழியர்கள் இன்று திட்டமிட்டபடி நாடு தழுவிய அளவிலான ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதில், தமிழ்நாட்டில் 35 ஆயிரம் பேர் உள்பட அகில இந்திய அளவில் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இதனால், வங்கி சேவைகள் முற்றிலுமாக முடங்கும் நிலை […]

Categories
தேசிய செய்திகள்

விடிவு கிடைக்குமா ? ப.சிதம்பரத்திற்கு ….. இன்று தீர்ப்பு ….!!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம் தாக்கல் செய்த பிணை மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாகிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தை பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோர் தொடங்கினர். இந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில், ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் பெயரையும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பெயரையும் சிபிஐ சேர்த்தது. இந்த வழக்கில் முன்பிணை […]

Categories
தேசிய செய்திகள்

நாளை தீர்ப்பு…. சுதந்திரக் காற்றை சுவாசிப்பாரா சிதம்பரம்?

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம் தாக்கல் செய்த பிணை மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாகிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தை பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோர் தொடங்கினர். இந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில், ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் பெயரையும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பெயரையும் சிபிஐ சேர்த்தது. இந்த வழக்கில் முன்பிணை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவின் நேர்மை – வெகுவாக பாராட்டிய ராகுல்காந்தி ….!!

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மனதாரப் பாராட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடக்கும் ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் பக்ஷிஷ் சிங் விர்க். அண்மையில் இவர் பேசிய காணொலி ஒன்று வைரலானது.தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பக்ஷிஷ் சிங் விர்க், நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் அது பாரதிய ஜனதாவுக்குத்தான் விழும் என்ற பொருள்பட பேசினார். அவ்வளவுதான் கூட்டத்தில் கலந்துகொண்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜக தலைவராக ஹெச். ராஜா நியமிக்கப்பட வேண்டும்”…. சிவசேனா தலைவர் ராதாகிருஷ்ணன்.!!

பாஜகவின் தமிழக தலைவராக ஹெச். ராஜா நியமிக்கப்பட வேண்டும் என்று சிவசேனா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சிவசேனா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர், “உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கின்றோம். 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையை நாங்கள்தான் செய்தோம் என கூறும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”எல்லோரும் , இளைஞர்கள் வாக்களியுங்கள்” – பிரதமர் மோடி ட்வீட்

இரண்டு மாநில சட்டப்பேரவை மற்றும் பல்வேறு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். மகாராஷ்டிரா , ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு , இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது . காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று அனைவரும் வருகின்றனர் . இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி , எல்லோரும், முக்கியமாக இளைஞர்கள் அதிகமாக வாக்களித்து இந் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான் ஒரு பச்ச தேச துரோகி: ஹெச்.ராஜா கொளுத்தும் சரவெடி

இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில், பங்கேற்ற பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா திமுக, நாம் தமிழர் கட்சியை பகிரங்கமாக விமர்சித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் சீருடையுடன் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்:பஞ்சமி இட விவகாரத்தில் ஸ்டாலின் ஏன் இதுவரையில் அந்த இடத்தின் மூல பத்திரத்தை வெளியிடாமல், பட்டாவை மட்டும் வெளியிட்டார். இதன் மூலம் திமுகவின் சொத்துக்கள் அனைத்தும், பஞ்சமி நிலங்களை […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீர் போதும் விவசாயம் வேண்டாம்” மோடியின் பிரசாரம் பின்னடைவு …!!

மோடியின் தேர்தல் பரப்புரையில் காஷ்மீர் விவகாரத்திற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதனால், இந்த இரண்டு மாநிலங்களிலும் பிரதமர் மோடி சூறாவளி பரப்புரை மேற்கொண்டார். தேசிய பாதுகாப்பு, காஷ்மீர் போன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் தந்து மோடி இந்த பரப்புரைகளில் தொடர்ந்து பேசிவந்தார்.ஆனால், விவசாய பிரச்னைகளை அவர் எழுப்பாமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை தருவதாகவும் இது முக்கிய பிரச்னைகளை மடைமாற்றுவதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

மகாத்மா காந்தி எண்ணங்கள் உலகெங்கும் எதிரொலிக்கும்: பிரதமர் நரேந்திர மோடி

தேசப்பிதா மகாத்மா காந்தியின் எளிமை, எண்ணங்கள் உலகின் மூலை முடுக்கெங்கிலும் எதிரொலிக்கும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பல்துறை அறிஞர்கள், பொழுதுப்போக்கு துறையைச் சேர்ந்த சினிமா நட்சத்திரங்களுடன் கலந்துரையாடினார்.அப்போது அவர் கூறியதாவது, உருவாக்கும் திறமை மகத்தானது. உருவாக்குதல் என்பது நாட்டுக்குத் தேவை. உருவாக்குதல் என்பது நாட்டுக்கு உத்வேகத்தை அளிக்கும். சிலர் வெளிநாட்டு பொழுதுபோக்குத் துறைகளிலும் வேலை பார்க்கின்றனர். அவர்கள் தங்களின் துறை […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன அக்கா-னு கூப்பிடுங்க…… தன்னை கிண்டல் செய்தவர்களை மேடையில் வச்சி செஞ்ச தமிழிசை…..!!

தன்னை ஆளுநர் என்று அழைப்பதைவிட பாசமிகு சகோதரி என்று அழைப்பதைத்தான் விரும்புவதாக தெலுங்கானா ஆளுநரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான தமிழிசை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்லூரியின் நிறுவன தின விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழிசை, “நான் தமிழ்நாட்டிற்கு என்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன். மேதகு ஆளுநர் என்று அழைப்பதை விட பாசமிகு சகோதரி என்று அழைப்பதைத்தான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்னை சகோதரி என்று அழைத்தது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”பொருளாதார புரிதல் மோடிக்கு இல்லை” – ராகுல் காந்தி கடும் விமர்சனம் …!!

மோடிக்கு பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லையென்றும் அவர் மக்களுக்காக செயல்படுவதை விடுத்து பெரு முதலாளிகளுக்காக செயல்படுகிறார் எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஹரியானாவில் மகேந்திர கர் பகுதியில் சோனியாகாந்தி பங்கேற்கவிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கடைசி நேரத்தில் அவருக்கு பதிலாக ராகுல் காந்தி கலந்துகொண்டு பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ஜிஎஸ்டி வரிவிதிப்பாலும், பணமதிப்பு இழப்பாலும் சிறு தொழில் நிறுவனங்களும், வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு இந்த இரண்டும் இந்திய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மும்பை தாக்குதலுக்கு பிறகும் காங்கிரஸ் செயல்படவில்லை – மோடி

மும்பை தாக்குதலில் காரணமானவர்கள் குறித்து விசாரணைக்கு பின்பும் கூட காங்கிரஸ் அரசு உரிய முறையில் செயல்படவில்லை என்று நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடியுள்ளார். மகாராஷ்டிராவில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணாமக பாஜக, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் சூறாவளிப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன் தனது கடைசி பரப்புரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மும்பையில் நடைபெற்ற பயங்வாதிகள் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

இந்துத்துவா vs இன்குலாப் – சவால் விடும் இடதுசாரிகள்….!!

இந்துத்துவாவை எதிர்க்ககூடிய வலிமை இடதுசாரி கொள்கைக்கு உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டோடு கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் ஆக உள்ளது. இதனை ஆண்டு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக கொல்கத்தாவில் அக்கட்சி சார்பாக கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டார்.அப்போது அவர் கூறுகையில், “இந்துத்தவாவின் தாக்குதலை தடுக்க சிவப்பு வண்ண கொடியால் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

“வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்”… அமித்ஷா வலியுறுத்தல்..!!

வெள்ளையர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட இந்திய வரலாற்றை மாற்றி, இந்தியர்களின் கண்ணோட்டத்தில் புதிதாக எழுத வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குவது குறித்து மகாராஷ்ட்ரா சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் வாரணாசி பனராஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் 1857ஆம் ஆண்டின் சிப்பாய்க்கலகம் குறித்து பிரிட்டன் குறிப்புகளில் இடம் பெறாத தகவல்களை சுட்டிக்காட்டினார். […]

Categories
தேசிய செய்திகள்

“இனி ருசியா சாப்பிடலாம்”… ப. சிதம்பரத்திற்கு வீட்டு உணவு வழங்க நீதிமன்றம் அனுமதி..!!

 ப. சிதம்பரத்திற்கு வீட்டு உணவு மற்றும் மேற்கத்திய கழிவறை உள்ளிட்ட வசதிகளை அளிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐயால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் சிதம்பரத்தை அமலாக்கத்துறை சிறையில் வைத்தே விசாரணை நடத்தி பின்னர் கைது செய்தது. மேலும், ப. சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ள 14 நாட்கள் அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 500 நோட்டில் 121 % போலி ….. ரூ 2000 நோட்டில் 21.9 % போலி …… விவாதித்த நாடாளுமன்றக் குழு …!!

போலி ரூபாய் நோட்டுகள் பற்றியும் , அதை கட்டுப்படுத்துவதற்கான முறைகள் பற்றியும் நாடாளுமன்றக் குழு விதித்துள்ளது. போலி ரூபாய் நோட்டுகளால் நிகழும் பிரச்னைகள் குறித்தும், உச்சபட்ச பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி எவ்வாறு இந்தப் போலி நோட்டுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பிரதி எடுக்கின்றன என்பது குறித்தும் நாடாளுமன்றக் குழு ஒன்று விவாதித்துள்ளது.அதிக மதிப்புள்ள இந்திய ரூபாயின் போலி நோட்டுகள் பரிமாற்றத்தைத் தடுக்க அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது பற்றி நாடாளுமன்றக் குழு ஒன்று, 16-10-2019 அன்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”பாஜகவுக்கு வாக்களியுங்கள்” வாக்குச் சேகரிப்பில் யோகா குரு…..!!

மஹாராஷ்டிரா, ஹரியானா தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்கும் படி யோக குரு பாபா ராம்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார். பதஞ்சலி நிறுவனரும், யோக குருவுமான பாபா ராம்தேவ், ஹரியானா மாநிலம் குருகுராமில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான பாஜகவால் தான் மத்தியிலும், மாநிலங்களிலும் நிலையான ஆட்சியைத் தர முடியும். ஒரு நிலையான ஆட்சியே, மக்கள் ஆட்சியாகப் பார்க்கப்படும். நரேந்திர மோடி தலைமையிலான அரசு, […]

Categories
தேசிய செய்திகள்

”மக்கள் சேவையில் ஈடுபட்ட அரசு நிறுவனம்” சீரழிந்திருக்கக் கூடாது….!!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்., 24ஆம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக, பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மதிவண்ணன், நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றம்’ (SAVE BSNL FORUM) என்ற அமைப்பின் கீழ், நாங்கள் 10 சங்கங்கள் இணைந்து தமிழ்நாடு தழுவிய அளவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கான தொடர் போராட்டங்களை நடத்த முடிவு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

திருமணமான 1 மாதத்தில் படுகொலை…… பாஜக நிர்வாகி மரணம்….. புதுச்சேரியில் பரபரப்பு….!!

புதுச்சேரியில் திருமணமான ஒரே மாதத்தில் பாஜக முன்னாள் நிர்வாகி கைகளை முன்பே பயங்கரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் பாலாஜி. பாஜக முன்னாள் இளைஞரணி பொறுப்பாளரான ஆனந்த் பாலாஜி, எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தநிலையில் ஆனந்த் பாலாஜி நேற்று மாலை புதுச்சேரி விவேகானந்தா நகர் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள, கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது தேநீர் கடைக்கு வந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : ”சம்பளத்துடன் பொதுவிடுமுறை” அரசானை வெளியீடு ….!!

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்.21 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”மோடி திட்டம் சாம்பலாகி விடுகிறது” தா. பாண்டியன் விமர்சனம் …!!

வெடி வெடித்தவுடன் எப்படி சாம்பலாகிறதோ, அதுபோல மோடி போடும் திட்டமும் சாம்பலாகிவிடுகிறது  என்று தா.பாண்டியன் விமர்சித்தார். ஆண்டுதோறும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடு குறித்தும் பரிசீலித்த பின் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து இந்த பரிசை அறிவித்து வருகின்றனர். அதன்படி 2019-ஆம் ஆண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”திமுகவும் , ஊழலும் மூன்றெழுத்து” அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் …!!

திமுக என்பதும் மூன்றெழுத்து, ஊழல் என்பதும் மூன்றெழுத்து  என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிடுகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

சோன்பத்ரா கலவரம்: கிராமத் தலைவர் உள்பட 51 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை….!!

சோன்பத்ரா கலவரத்தில் கிராமத் தலைவர், அவரின் சகோதரர்கள் உள்பட 51 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நிலங்களை தங்களுக்கு கொடுக்குமாறு மாற்று சமூகத்தினர் கட்டாயப்படுத்தினர். ஆனால் அதற்கு பழங்குடியின மக்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், அங்கு கலவரம் ஏற்பட்டு 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரத்தில் தொடர்புடைய 15 அரசு அலுவலர்களுக்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், கிராமத் […]

Categories

Tech |