மூதாட்டி ஒருவர் தனது 102-வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சவுரிபாளையம் பகுதியில் ஆர்.அலமேலு அம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகள், மகன், பேரன், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி ஆகியோருடன் தனது 102-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடனப்போட்டி, உறியடித்தல், கண்ணாமூச்சி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு […]
