ஈரோட்டில் கெட்டி சமுத்திரம் ஏரியில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து இனிமையாக கூச்சலிட்டு வருவதை அப்பகுதி மக்கள் கேட்டு ரசித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த பர்கூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கெட்டி சமுத்திரம் ஏரியானது சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது சமீபத்தில் 9 ஆண்டுக்கு பின் முழு கொள்ளவை எட்டியது. இதை எண்ணி அப்பகுதி மக்கள் சந்தோஷம் அடைந்தனர். வெளிநாட்டு பறவையான செங்கல் நாரை உள்ளிட்டவை ஏப்ரல் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஏரியை […]
