கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைக்கு அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்கான கட்டணங்களை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. […]
