பிக் பாஷ் டி20 தொடரின் இறுதி போட்டி ஒருவேளை மழையால் ரத்தாகும் பட்சத்தில், இப்போட்டி சிட்னி சிக்சர்ஸ் அணியின் சொந்த மண்ணில் நடைபெறுவதால் அவர்களுக்கே கோப்பை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபிஎல் போல, ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 தொடருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளன. பிக் பாஷ் டி20 தொடரின் ஒன்பதாவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சிட்னி சிக்சர்ஸ் அணி ஏற்கனவே இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை மெல்போர்னில் […]
