ரஜினியின் அரசியல் பயணம் குறித்து நான் பேச விரும்பவில்லை என இயக்குநர் பாரதி ராஜா பேசினார். நடிகர் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாள் விழா வேலூர் மாவட்டம் ரங்காபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் பாரதி ராஜா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பல்வேறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. […]
