நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆறாவது கிளை மாநாட்டில் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரியிலிருந்து பேரணியாக பேருந்து நிலையத்திற்குச் சென்றனர். அங்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின்பு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் ஆறாவது கிளை மாநாட்டில் மாணவர்கள் கலந்து […]
