நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக விஷால் ஆளுநரை சந்தித்த நிலையில் பாக்யராஜ் , ஐசரி கணேஷ் அணியினரும் தமிழக ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 23-ஆம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிடும் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. அடுத்தடுத்து ஏற்பட குழப்பங்களால் தேர்தல் நடத்த தடை விதித்து தென் சென்னை […]
