பணமதிப்பிழப்பு செய்யப்பட்டிருக்கும் ரூபாய் நோட்டுகளை மாற்றி தருமாறு கலெக்டர் அலுவலகத்திற்கு பிச்சைக்காரர் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன கவுண்டனூர் கிராமத்தில் சின்னக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பிச்சைக்காரர். இந்நிலையில் இவர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியதாவது, சின்னகவுண்டனூர் கிராமத்தில் இருக்கும் புறம்போக்கு பகுதியில் குடிசை அமைத்து ஆதரவற்ற நிலையில் நான் வசித்து வருகின்றேன். எனக்கு ஐந்து வயதிலேயே கண் பார்வை பறிபோய்விட்டதினால் […]
