தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டள்ளார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை சித்தரிப்பேட்டையில் காய்ச்சல் பரிசோதனை மற்றும் முகாமை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுகாதார செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறியுள்ளார். பீலா ராஜேஷ் மாற்றம் முழுக்க முழுக்க நிர்வாக நடவடிக்கையே, வேறு எந்த […]
