கரடிகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதிக்குள் அதிகாலை நேரத்தில் 3 கரடிகள் நுழைந்து விட்டது. இந்த மூன்று கரடிகளும் தூய்மை பணியாளர்களை விரட்டியுள்ளது. இதனையடுத்து அந்த 3 கரடிகளும் அங்குள்ள வயல்வெளிக்குள் சென்ற காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது குடியிருப்பு பகுதிக்குள் கரடிகள் அடிக்கடி நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல […]
