கரடிகள் தாக்கியதால் விவசாயி படுகாயமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிமுட்லு கிராமத்தில் விவசாய சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து 2 குட்டிகளுடன் வெளியேறிய கரடி சீனிவாசன் மீது பாய்ந்து அவரை பலமாக தாக்கியுள்ளது. இதனையடுத்து மூன்று கரடிகளும் சீனிவாசனின் தலை, கை, கால்களை கடித்து குதறியதால் அவர் அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் […]
