விவசாயி மயில்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வலசுபாளையம் கிராமத்தில் விவசாயியான பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்து கிடந்த 12 பெண் மயில்கள் மற்றும் 7 ஆண் மயில்களை பார்வையிட்டுள்ளனர். அதன் பின் கால்நடை மருத்துவர் இறந்து கிடந்த மயில்களின் உடல்களை […]
