ஆடவர் கிரிக்கெட்டர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை மகளிர் கிரிக்கெட்டர்களுக்கும் கொடுக்கவேண்டும் என கேட்பதற்கு இது சரியான நேரம் இல்லை என இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ஆடவர், மகளிர் கிரிக்கெட்டர்களுக்கான பிசிசிஐ ஒப்பந்த விவரங்கள் சில நாள்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது. அதில் ஆடவர் கிரிக்கெட்டர்களுக்கு அதிகபட்ச ஊதியம் ரூ. 7 கோடியாகவும், மகளிர் கிரிக்கெட்டர்களுக்கு அதிகபட்ச ஊதியம் ரூ. 50 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த ஊதிய ஏற்றத்தாழ்வு குறித்து ஸ்மிருதி மந்தனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதுபற்றி அவர் […]
