எங்கள் நாட்டுக்கு வந்தால் மட்டுமே நாங்கள் வருவோம் என்றும், பாகிஸ்தான் ஆடாவிட்டால் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையை யார் பார்ப்பார்கள் என்று ரமீஸ் ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா கடந்த மாத தொடக்கத்தில், 2023 இல் நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பைக்கு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று கூறியிருந்தார், மாறாக மைதானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்படும் என்று பரிந்துரைத்தார். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான ஜெய் […]
