Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிக் பாஷ் லீக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சிட்னி சிக்சர்ஸ்!

பிக் பாஷ் லீக் தொடரின் குவாலிஃபயர் சுற்றில் வெற்றிபெற்ற சிட்னி சிக்சர்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. 2019-20ஆம் ஆண்டுக்கான பிக் பாஷ் தொடரின் ப்ளே – ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடந்துவருகின்றன. இதன் இரண்டாவது போட்டியான குவாலிஃபயர் போட்டியில் முதலிடம் பிடித்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை எதிர்த்து இரண்டாம் இடம் பிடித்த சிட்னி சிக்சர்ஸ் அணி விளையாடியது. இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் என்பதால், ரசிகர்களிடையே இந்தப் போட்டிக்கு அதீத எதிர்பார்ப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிக் பாஷ் : ஹோபர்ட் ஹெர்கேன்ஸை வெளியேற்றிய சிட்னி தண்டர்ஸ்!

ஹோபர்ட்: பிக் பாஷ் தொடரின் எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை சிட்னி தண்டர்ஸ் அணி வீழ்த்தியது. பிக் பாஷ் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து, ப்ளே சுற்று ஆட்டங்கள் தொடங்கின. இதன் முதல் ஆட்டமான எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில் நான்காவது இடம் பிடித்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை எதிர்த்து ஐந்தாவது இடம் பிடித்த சிட்னி தண்டர்ஸ் அணி ஆடியது. இதில் டாஸ் வென்ற சிட்னி தண்டர்ஸ் அணி கேப்டன் ஃபெர்குசன் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஷார்ட் பந்துவீச்சில் வலுவிழந்த சிட்னி தண்டர்ஸ்!!

சிட்னி தண்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி வெற்றிபெற்றது. பிக் பாஷ் லீக் தொடரின் 50ஆவது லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிராக சிட்னி தண்டர்ஸ் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஹோபர்ட் அணி கேப்டன் மேத்யூ வேட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஹோபர்ட் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் ஷார்ட், ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, பின்னர் ஜோடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரன் அவுட்டிலிருந்து தப்பிக்க பவுலரின் தலைக்கு மேல் குதித்த பேட்ஸ்மேன்.!!

பிக் பாஷ் கிரிக்கெட் தொடரின்போது ரன் அவுட் ஆகாமல் இருக்க, பேட்ஸ்மேன் பந்துவீச்சாளரின் தலைக்கு மேல் குதித்து காயமடைந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஷ் கிரிக்கெட் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் 47ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை எதிர்த்து ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி ஆடியது. முதலில் பேட்டிங் ஆடிய ஹோபர்ட் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதையடுத்து மெல்போர்ன் அணிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பவுலிங்கில் மிரட்டிய பீட்டர் சிடில்… அடிலெய்ட் வெற்றி!

பிக் பாஷ் டி20 தொடரின் 48ஆவது லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது. பிக் பாஷ் டி20 தொடரின் ஒன்பதாவது சீசனுக்கான போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், இன்று அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தத் தொடரின் 48ஆவது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருக்கும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியும், மூன்றாவது இடத்திலிருக்கும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட்டில் கால்பந்து விளையாடி ரன் அவுட் செய்த மோரிஸ்

ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் டி20 தொடரின் கிறிஸ் மோரிஸ் தனது காலால் பந்தை எட்டி உதைத்து சிட்னி சிக்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் டேனியல் ஹியூஸை ரன் அவுட் செய்துள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் பலமுறை பேட்ஸ்மேன்களை ரன் அவுட் செய்வதற்காக பந்துவீச்சாளர்கள், கால்பந்து வீரராக மாறுவதைப் பார்த்திருப்போம். பிட்ச்சில் நடுவே இருக்கும் பந்தை கீழே குணிந்து எடுக்காமல் பந்துவீச்சாளர்கள் தங்களது கால்பந்து திறனை வெளிப்படுத்தி காலால் பந்தை ஸ்டெம்புக்கு எட்டி உதைத்து பேட்ஸ்மேன்களை அவுட் செய்வார்கள். தற்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னங்கடா இது ….. ”ஒரே நாளில் இரு ஹாட்ரிக்” பிக் பாஷ் அலப்பறைகள்!

 பிக் பாஷ் டி20 லீக் தொடரில் ஒரே நாளில் நடந்த இரு போட்டிகளிலும், ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக் பாஷ் லீக் தொடரில் நாளுக்கு நாள் பரபரப்பு எகிறிக்கொண்டே போகிறது. இரு நாட்களுக்கு முன்னதாக டாம் பாண்டன் 6 பந்துகளில் 5 சிக்சர்கள் அடித்து அசத்தினார். இதையடுத்து இன்று நடந்த அடுத்தடுத்தப் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த முதல் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணியை எதிர்த்து அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹேக் செய்யப்பட்ட முன்னாள் ஆஸி. வீரரின் ட்விட்டர் பக்கம்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான டேரன் லீமனின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. பிரபல நட்சத்திர நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகள் ஹேக்கர்களால் எளிதில் ஹேக் செய்யப்பட்டுவருகின்றன. அந்தவகையில், தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான டேரன் லீமன் சிக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பாஷ் டி20 தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியின் பயிற்சியாளராக இருந்துவரும் லீமனின் ட்விட்டர் கணக்கை நேற்று ஹேக்கர்கள் முடக்கினர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

6 பந்துகளில் 5 சிக்சர்: பிக் பாஷில் பறக்கவிட்ட கொல்கத்தாவின் புதிய வரவு

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியால் ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த டாம் பேண்டன், 6 பந்துகளில் 5 சிக்சர்கள் அடித்து அசத்தியுள்ளார். 2019-20ஆம் ஆண்டுக்கான பிக் பாஷ் டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இன்றையப் போட்டியில் சிட்னி தண்டர்ஸ் அணியை எதிர்த்து பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணி விளையாடியது. இந்தப் போட்டி மழை காரணமாக 8 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற பிரிஸ்மேன் ஹீட்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. தொடக்க வீரர்களாக டாம் பேண்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நண்பனை பார்த்து இப்படியா கேட்பது”…. ஸ்டோய்னிஸுக்கு அபராதம் விதித்த ஆஸ்திரேலியா.!!

ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்சனை ‘ஓரினச்சேர்க்கையாளர்’ என அவதூறாக பேசிய சகவீரர் ஸ்டோய்னிஸுக்கு 7,500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான பிக் பாஷ் டி20 தொடரின் நேற்றைய போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை எதிர்த்து மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி விளையாடியது. இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டிக்கிடையே மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வீரர் கேன் ரிச்சர்ட்சன்னைப் பார்த்து ‘ஓரினச்சேர்க்கையாளர்’ என […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

6 வருஷம் ஆச்சுல்ல….. ”திரும்ப வந்துட்டேனு சொல்லு” அசத்த போகும் ஸ்மித் …!!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் லீக் டி20 தொடரில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டீவன் ஸ்மித் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபர் ஸ்டீவன் ஸ்மித். இவர் தற்போது ஐசிசியின் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தி வருகிறார். இதன் மூலம் கடந்த மாதம் ஆஸ்திரேலிய டி20 அணியிலும் இடம்பிடித்தார்.இவர் ஆஸ்திரேலியாவின் டி20 அணிக்கு கிட்டத்திட்ட மூன்றரை வருடங்களுக்கு தற்போது இடம்பிடித்துள்ளார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஸ்மித் […]

Categories

Tech |